Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம கோபம்.. "சேரை" தூக்கி அடித்த சங்கக்கரா.. போட்டிக்கு இடையே நடந்த பரபரப்பு சம்பவம்.. என்ன ஆச்சு?

மும்பை: நேற்று ராஜஸ்தான் அணியின் இயக்குனர் சங்கக்கரா டெல்லிக்கு எதிரான ஆட்டம் நடக்கும் போதே கோபத்துடன் காணப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

Pantன் Run Out! Bihu Dance ஆடிய Riyan Pirag | OneIndia Tamil | OneIndia Tamil Cricket

நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி படுதோல்வி அடைந்தது. கடைசி ஓவர் வரை திரில்லாக ஆட்டம் செல்ல, கிறிஸ் மோரிஸ் கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்தார்.

இந்த போட்டியில் இரண்டு அணியின் டாப் ஆர்டர் வீரர்களும் சரியாக ஆடவில்லை. இரண்டு அணியிலும் ஒப்பனர்கள் மோசமாக சொதப்பி அவுட் ஆனார்கள்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

நேற்று இந்த போட்டியில் ராஜஸ்தான் எளிதாக வெற்றி அடைந்துவிடும் என்றுதான் கருதப்பட்டது. 147 ரன்கள் எடுத்தால் போதும் என்பதால் ராஜஸ்தான் அணி நம்பிக்கையுடன்தான் இறங்கியது. சஞ்சு சாம்சன் மட்டுமே தனியாளாக இந்த போட்டியை முடித்துவிடுவார் என்றே கருதப்பட்டது. ராஜஸ்தான் அணியின் பேட்டிங் ஆர்டரும் நன்றாக இருந்ததால் நம்பிக்கையுடன்தான் அந்த அணி களமிறங்கியது.

எப்படி

எப்படி

ஆனால் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில் இருந்தே வரிசையாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ராஜஸ்தானின் டாப் 4 வீரர்கள் வெறும் 17 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.பட்லர் 2 ரன்னுக்கும், வோஹ்ரா 9 ரன்னுக்கும் அவுட் ஆனார்கள்.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன் 4 ரன்னுக்கும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதுவரை ராஜஸ்தான் அணியின் இயக்குனர் சங்கக்கரா பெரிய அளவில் முகத்தை உணர்ச்சியை காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் ஷிவம் துபேவும் 2 ரன்னுக்கு அவுட் ஆன நிலையில் சங்கக்கராகடும் கோபம் அடைந்தார்.

சேர்

சேர்

4 விக்கெட் போனதும் மிகவும் கோபமாக காணப்பட்ட சங்ககரா அருகில் இருந்தே இருக்கையில் கையை வைத்து ஓங்கி அடித்தார். நேற்று கிறிஸ் மோரிஸ் களமிறங்கி கொஞ்சம் அதிரடி காட்டும் வரை சங்கக்கரா கோபமாக இருந்தார். முகத்தில் அப்படியே வெளிப்படையாக இவர் டென்ஷனை காட்டினார்.

டென்சன்

டென்சன்

முதல் போட்டியில் தோல்வி அடைந்த காரணத்தால் இந்த போட்டியிலாவது வெற்றிபெற வேண்டும் என்று அவர் நினைத்து இருப்பார். அதோடு அதிகம் நம்பிய ராஜஸ்தான் டாப் ஆர்டரின் சரிவை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகவே நேற்று சங்கக்கரா போட்டி முழுக்க கோபத்துடன் காணப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள்.

Story first published: Friday, April 16, 2021, 15:23 [IST]
Other articles published on Apr 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+