Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேகேஆர் அணிக்கு மீண்டும் புது கேப்டன்? தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்புள்ளதா.. முன்னாள் வீரர் சூசகம்

அமீரகம்: கொல்கத்தா அணிக்கு சீனியர் வீரர் ஒருவரை உடனடியாக கேப்டனாக நியமிக்க வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் திடீரென எழுச்சி கண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மீண்டும் சரிவு பாதைக்கு சென்றுள்ளது.

இந்த தொடர் சொதப்பல்களுக்கு முக்கிய காரணமாக கேப்டன் இயான் மோர்கன் மீதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அந்த குற்றச்சாட்டு வலுப்பெற்றுள்ளது.

மோர்கனின் மோசமான ஃபார்ம்

மோர்கனின் மோசமான ஃபார்ம்

அமீரகத்தில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் இயான் மோர்கன், வெறும் 17 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இதில் மோசமான விஷயம் என்னென்றால், ஒருபோட்டியில் கூட 10 ரன்களை கடக்கவில்லை. மோர்கனின் இந்த மோசமான பார்ம் குறித்து பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

மோர்கன் தொடர்ந்து சொதப்பி வருவதால், உடனே அவரை நீக்கவிட்டு புதுக் கேப்டனை நியமிக்க வேண்டும் என்ற தொடர்ந்து வலுத்து வருகிறது. ஏற்கனவே தினேஷ் கார்த்திக்கின் பதவியை நீக்கி மோர்கன் கொண்டு வந்தார். தற்போது மோர்கனை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஆகாஷ் சோப்ரா அட்வைஸ்

ஆகாஷ் சோப்ரா அட்வைஸ்

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா புதிய யோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மோர்கனை நம்பியது போதும். இனிமேலும் அவரை நம்பி பிரியோஜனம் இல்லை. அவருக்கு மாற்றாக புதுக்கேப்டனை நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். நம்பிக்கையற்ற நேரங்களில், துணிச்சலான முடிவினை எடுத்துதான் ஆக வேண்டும்.

Recommended Video

KL Rahul, Shahrukh Khan guides Punjab to 5-wicket win | PBKS vs KKR | OneIndia Tamil
தேவையான மாற்றம் இது

தேவையான மாற்றம் இது

இனி வரும் ஆட்டங்கள் கொல்கத்தா அணிக்கு முக்கியமானவை. எனவே அந்த போட்டிகளில் ஷகிப் அல் ஹசனை கேப்டனாக நியமிப்பது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சிந்திக்க முடியுமா? நான் மோர்கனுக்கு எதிராக பேசவில்லை. அவரிடம் எதிர்பார்த்த ரன்கள் வரவில்லை. சிறந்த வீரருக்கு இப்படி நடப்பது இயல்புதான். ஷகிப்பை கேப்டனாக நியமித்தால் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பங்களிப்பு செய்ய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கட்டாய வெற்றி

கட்டாய வெற்றி

கொல்கத்தா அணி தற்போது 12 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்த அணி வெற்றிப் பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதியாக தக்க வைக்க முடியும். அடுத்த இரண்டு போட்டிகளில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுடன் கொல்கத்தா விளையாடும் என்பதால் அதற்காவது கேப்டன் மாற்றப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Saturday, October 2, 2021, 15:10 [IST]
Other articles published on Oct 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+