Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீங்க நினைக்கிற மாதிரி அவர் கிடையாது.. அஸ்வினை விளாசி தள்ளிய மஞ்சிரேக்கர்.. என்ன இப்படி சொல்றாரு!

சென்னை: தமிழக வீரர் அஸ்வினின் டி 20 பவுலிங் முறையை கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சிரேக்கர் விமர்சனம் செய்துள்ளார்.

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் அஸ்வினின் பவுலிங் மிக மோசமாக அமைந்து இருந்தது. ரெய்னா தொடங்கி சாம் கரன் வரை அஸ்வினின் பவுலிங்கில் எளிதாக அடித்து ஆடினார்கள். முதல் போட்டியிலேயே அஸ்வின் கடுமையாக திணறினார்.

நேற்று 4 ஓவர் வீசிய அஸ்வின் 47 ரன்கள் கொடுத்தார். ஒவ்வொரு ஓவருக்கும் கிட்டத்தட்ட 11 ரன்களுக்கும் அதிகமாக கொடுத்தார். நேற்று அஸ்வினின் ஸ்பின் மேஜிக் சுத்தமாக வேலை செய்யவில்லை.

விமர்சனம்

விமர்சனம்

இந்த நிலையில் அஸ்வினின் பவுலிங் குறித்து கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சிரேக்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், அமித் ஷா மிஸ்ரா டெல்லி அணியில் சுமாராகவே பவுலிங் செய்தார். அவரின் பவுலிங்கில் பெரிதாக வித்தியாசம் பார்க்க முடியாது.

டெஸ்ட்

டெஸ்ட்

அவர் டெஸ்ட் என்றாலும் சரி, டி 20 என்றாலும் சரி. ஒரே மாதிரிதான் பவுலிங் செய்வார். முடிந்த அளவு பந்தை ஒரே மாதிரி சுற்ற முயற்சி செய்வார். தன்னுடைய வலிமை எதோ அதை மட்டுமே செய்வார். ஆனால் அஸ்வின் அப்படி இல்லை.

அஸ்வின்

அஸ்வின்

அஸ்வின் மாற்றி மாற்றி பவுலிங் செய்வார். முக்கியமாக டி 20 போட்டிகளில் அவர் ஆப் ஸ்பின் போடுவதே இல்லை. அவர் ஆப் ஸ்பின்னுக்கு பதிலாக புதிய வேரியேஷன்களை காட்டுகிறார். அவர் எப்படி விக்கெட் எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

ரன்

ரன்

ரன் கொடுக்க கூடாது. பேட்ஸ்மேன்கள் அடித்து விட கூடாது என்பதில் மட்டுமே அவர் கவனமாக இருக்கிறார். இதனால் புதிய வேரியேஷன்களை காட்டுகிறார். ஆனால் தனக்கு வலிமை சேர்க்க கூடிய ஆப் ஸ்பின் பவுலிங்கை செய்வது இல்லை. இதனால்தான் அவர் டி 20 போட்டிகளில் சொதப்புகிறார்.

காரணம்

காரணம்

அஸ்வின் டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் வேறு மாதிரி ஆடுகிறார். இவரை டி 20 மற்றும் ஒருநாள் அணியில் எடுக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் நீங்கள் டெஸ்டில் பார்க்கும் அஸ்வினும், டி 20 போட்டிகளில் பார்க்கும் அஸ்வினும் ஒரே ஆள் கிடையாது. இருவருக்கும் ஒரே பலம் கிடையாது, என்று அஸ்வினின் டி 20 பவுலிங் முறையை சஞ்சய் மஞ்சிரேக்கர் விமர்சனம் செய்துள்ளார்.

Story first published: Monday, April 12, 2021, 14:50 [IST]
Other articles published on Apr 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+