Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செம டென்சன்.. நொடிக்கு நொடி எகிறிய அழுத்தம்.. முக்கிய கட்டத்தில் அந்த தப்பை செய்த சாம்சன்.. பரபரப்பு

மும்பை: பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானின் புதிய கேப்டன் சஞ்சு சாம்சன் முக்கியமான டிஆர்எஸ் ஒன்றை தவற விட்டுள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. பஞ்சாப்பிற்கும் எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் தற்போது பவுலிங் தேர்வு செய்துள்ளது.

இதில் இரண்டு அணியிலும் வலுவான பேட்டிங் ஆர்டர் அமைந்துள்ளது. அதிரடியாக ஆட கூடிய வீரர்கள் இரண்டு அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

இன்று நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்முறை அவர் ஐபிஎல் போட்டியில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் சையது முஷ்டாக் கோப்பை தொடரில் கேரளா அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டார்.

நன்றாக ஆடினார்

நன்றாக ஆடினார்

அந்த தொடரில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டார். இந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று கேப்டனாக முதல்முறையாக ஆடும் சஞ்சு சாம்சன் கொஞ்சம் டென்ஷனாக இருந்தார். முதல் போட்டி என்பதால் கொஞ்சம் பதற்றமாக காணப்பட்டார்

பதற்றம்

பதற்றம்

மொத்த அணியையும் வழி நடத்த வேண்டும், சர்வதேச வீரர்களுக்கு அறிவுரை கொடுக்க வேண்டும் என்பதால் கொஞ்சம் டென்ஷனாக இருந்தார். இந்த பதற்றம் காரணமாக சஞ்சு சாம்சன் முக்கியமான டிஆர்எஸ் ஒன்றை தவற விட்டுள்ளார்.முஸ்தபிசர் போட்ட ஓவரில் மயங்க அகர்வால் எல்பிடபிள்யூ ஆனார்.

எல்பிடபிள்யூ அவுட்

எல்பிடபிள்யூ அவுட்

ஆனால் நடுவர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. ஆனால் பார்த்தாலே இது எல்பிடபிள்யூ என்று தெரிந்தது. சஞ்சு சாம்சன் ரிவ்யூ கேட்டால் விக்கெட். ஆனால் சஞ்சு பதற்றத்தில் இருந்தார். இதனால் ரிவ்யூ கேட்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தார்.

குழப்பம்

குழப்பம்

அருகில் இருந் பட்லரிடம் ரிவ்யூ கேட்கட்டுமா என்று கேட்டார். அவரால் உறுதியாக சொல்ல முடியவில்லை. இதனால் மயங்க விக்கெட்டுக்கு ரிவ்யூ கேட்காமல் சஞ்சு சாம்சன் தவறவிட்டார். முதல் முறை கேப்டன் என்பதால் சஞ்சு இந்த தவறை செய்தார். ஆனால் அதற்கு அடுத்து சில பந்துகளிலேயே சக்காரியா ஓவரில் மயங்க் அவுட்டாகி வெளியேறினார்.

Story first published: Monday, April 12, 2021, 20:15 [IST]
Other articles published on Apr 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+