இதே வேலையா போயிடுச்சு.. அவ்வளவுதான்.. இனி இவர் ஆட மாட்டார்.. மூட்டையை கட்ட போகும் ஐபிஎல் அணி!
சென்னை: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதல் போட்டியில் அதிரடியாக ஆடிய பின் வரிசையாக இரண்டு போட்டிகளில் சொதப்பி அதிர்ச்சி அளித்துள்ளார்.
இந்திய அணியில் எப்படியாவது தோனியின் கீப்பர் இடத்தை பிடித்து விடலாம் என்று பல வீரர்கள் முயன்று வருகிறார்கள். இதில் கீப்பர் சஞ்சு சாம்சனும் முக்கியமான வீரர்.
முதல் தர போட்டிகளில் நன்றாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் எப்படியாவது ஐபிஎல் போட்டிகளில் அதிரடி காட்டி அதன் மூலம் இந்திய அணியிலும் வாய்ப்பு பெறலாம் என்று நினைக்கிறார். இந்திய அணியில் இவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை இதுவரை பெரிதாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

சிக்கல்
சஞ்சு சாம்சன் மிகவும் ஸ்டைலான வீரர் என்பது இவரை பார்க்கும் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவரின் பிரச்சனையே தொடர்ந்து பார்மில் இல்லாததுதான். முதல் 2-3 போட்டிகளில் அதிரடியாக ஆடும் சஞ்சு சாம்சன் அதன்பின் சீசன் முழுக்க மொத்தமாக சொதப்புவார். கடந்த 4-5 வருடமாக ஐபிஎல்லில் இவர் இப்படித்தான் ஆடி வருகிறார்.

ஐபிஎல்
முதல் சில போட்டிகளில் அரைசதம் அடிப்பது, சதம் அடிப்பது என்று சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடுவார். அதன்பின் மொத்தமாக பார்மை இழந்து 10 ரன்கள் கூட எடுக்காமல் அவுட் ஆவார். கடந்த வருடமும் ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் இதேபோல்தான் முதல் சில போட்டிகளில் நன்றாக ஆடிவிட்டு, அதன்பின் வரிசையாக அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பினார்.

சொதப்பல்
இந்த நிலையில் இந்த வருடமும் சஞ்சு சாம்சன் அதேபோல் சொதப்பி தொடங்கி உள்ளார். முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் 119 ரன்கள் எடுத்தார். ஆனால் அதன்பின் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் 10 ரன்கள் கூட எடுக்காமல் சொதப்பி உள்ளார். கடந்த வருடம் செய்தது போலவே இந்த வருடமும் சஞ்சு சாம்சன் தொடக்க கட்ட அதிரடிக்கு பின் பார்மை இழந்துள்ளார்.

ராஜஸ்தான்
ராஜஸ்தான் அணிக்கு இது கண்டிப்பாக பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கும். ஏற்கனவே ராஜஸ்தானில் ஆர்ச்சர் இல்லை. ஸ்டோக்ஸ் இல்லை. இப்போது சஞ்சுவும் பார்ம் அவுட் ஆகிவிட்டார். ராஜஸ்தானில் தற்போது பட்லரை தவிர நம்பிக்கை தர கூடிய வீரர்கள் யாரும் இல்லை. இதனால் அந்த அணி இந்த சீசனில் விரைவில் மூட்டை முடிச்சுகளை காட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications