Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7 சிக்ஸ்.. 12 பவுண்டரி.. 119 ரன்.. தனி ஆளாக போராட்டம்.. வான்கடேவில் சஞ்சு சாம்சனின் "வாத்தி ரெய்டு"!

மும்பை: பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மாஸ் ஆட்டம் ஆடி உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிக முக்கியமான ஆட்டத்தை சஞ்சு சாம்சன் ஆடியுள்ளார்.

ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றுள்ளது.ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 6 விக்கெட்டிற்கு 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் சஞ்சு சாம்சனின் ஆட்டம் ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்னும் பல வருடங்களுக்கு கண்டிப்பாக நினைவுகூறப்படும்.

முக்கியம்

முக்கியம்

இந்த போட்டியில் முதல் பாலில் இருந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடினார். வெற்றிதான் முக்கியம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பேட்டிங் செய்தார். முதல் பாலில் இருந்து சஞ்சு சாம்சன் பொறுப்போடு ஆடினார். ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இன்று சஞ்சு சாம்சன் முதல் முறையாக களமிறங்கினார். முதல் போட்டியே பரம் வைரியான பஞ்சாப் அணியுடன் நடந்தது.

பஞ்சாப்

பஞ்சாப்

பஞ்சாப் அணியும் இன்று அதிரடியாக ஆடி 221 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் ராகுல் 91, ஹூடா 64 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்கள். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் மட்டுமே தனியாக போராடினார். ஸ்டோக்ஸ் சரியாக ஆடவில்லை

பார்ட்னர்ஷிப்

பார்ட்னர்ஷிப்

பட்லர், துபே, ரியான் பராக் எல்லாம் சின்ன சின்ன கேமியோ மட்டுமே கொடுத்தனர். யாரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. அதிகம் நம்பிய திவாதியா பெரிதாக ஆடவில்லை. ஆனால் சஞ்சு சாம்சன் மட்டும் கேப்டனாக நின்று அதிரடியாக ஆடினார். ஸ்பின், பாஸ்ட் என்று பாரபட்சம் இல்லாமல் எல்லோரின் ஓவரில் அடித்து வெளுத்தார்.

செம

செம

அதிலும் பிபிஎல் போட்டிகளில் நன்றாக பவுலிங் செய்த ஜெய் ரிச்சரசனையும், மெரிடித்தையும் அசால்ட்டாக டீல் செய்தார். மொத்தம் 63 பந்துகள் பிடித்த சஞ்சு 119 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் போட்டியில் இதுதான் சஞ்சுவின் பெஸ்ட் ஸ்கோர். இதில் 7 சிக்ஸ், 12 பவுண்டரிகள் அடக்கம். ஒரு கேப்டனாக முதல் போட்டியிலேயே ஐபிஎல்லில் சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான்.

சதம்

சதம்

கடைசி பந்து வரை அணியின் வெற்றிக்காக போராடினார். ஆனால் கடைசி பந்தில் அவுட்டாகி சஞ்சு சாம்சன் அதிர்ச்சி அளித்தார். இன்றைய போட்டியில் ராஜஸ்தான் வெல்லவில்லை என்றாலும் சஞ்சு சாம்சன் கிரிக்கெட் கெரியரில் இன்றைய நாள் ஆட்டம் மிகப்பெரிய மைக்கல்லாக இருக்கும்.

Story first published: Tuesday, April 13, 2021, 0:24 [IST]
Other articles published on Apr 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+