Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு தூரமா எகிறுவது.. ஷாக் கொடுத்த சஞ்சு சாம்சன்.. வியப்படைந்த ஷிகர் தவான் - வீடியோ

மும்பை: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பிடித்த கேட்ச் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தான் அணியின் அபார பந்துவீச்சால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து குறைவான ஸ்கோரையே எடுத்துள்ளது.

தொடக்கம்

தொடக்கம்

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 147 ரன்களை எடுத்துள்ளது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் (9), ப்ரித்வி ஷா (2) வந்த வேகத்தில் வெளியேறினர்.

ராஜஸ்தான் அணிக்கு இலக்கு

ராஜஸ்தான் அணிக்கு இலக்கு

பின்னர் வந்த வீரர்களும் பின்னர் வந்த வீரர்கள் டாம் கரண் (20) கிறிஸ் வோக்ஸ் (15) அஸ்வின் (7), ரபாடா (9) ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். கேப்டன் ரிஷப் பண்ட் மட்டும் பொறுப்புடன் ஆடி 51 ரன்கள் விளாசியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 147 ரன்களை எடுத்தது.

வைரல்

இந்நிலையில் போட்டியின் போது சஞ்சு சாம்சன் பிடித்த கேட்ச் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 3வது ஓவரில் உனத்கட் வீசிய பந்தை தவான் பின் நோக்கி அடிக்க முயன்றார். ஆனால் பந்தை விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன், டைவ் அடித்து ஒரு கையில் கேட்ச் பிடித்து அசத்தினார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விறுவிறுப்பு கட்டம்

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள ராஜஸ்தான் அணி, டெல்லி அணியை போலவே ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. 8 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்களை எடுத்துள்ளது. இதனால் போட்டியில் விறுவிறுப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Story first published: Thursday, April 15, 2021, 22:31 [IST]
Other articles published on Apr 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+