ரிஸ்க்.. வேற வழி இல்லை.. பிசிசிஐக்கு பறந்த வார்னிங்.. IPL சஸ்பெண்டுக்கு முன் நடந்த "அந்த" மீட்டிங்!
சென்னை: 2021 ஐபிஎல் தொடரை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்ற முடிவை பிசிசிஐ அமைப்பு பல கட்ட ஆலோசனைக்கு பின்பே எடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
2021 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேதி அறிவிக்கப்படாமல், தொடரை தள்ளி வைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
பல வீரர்களுக்கு கடந்த 4 நாட்களாக அடுத்தடுத்து கொரோனா ஏற்பட்டது. இதையடுத்து ஐபிஎல் தொடரை தள்ளி வைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

திட்டம் இல்லை
முதலில் இந்த தொடரை தள்ளி வைக்கும் எண்ணம் பிசிசிஐ அமைப்பிற்கு இல்லை. பயோ பபுளை வைத்து எப்படியாவது தொடரை நடத்தலாம், இப்போது விட்டால் பின் நடத்த முடியாது என்றுதான் பிசிசிஐ நினைத்தது. இதனால் தொடரை தள்ளி வைக்க மறுத்து வந்தது.

மும்பை
ஆனால் நேற்று கொல்கத்தா அணியில் சில வீரர்களுக்கு கொரோனா வந்ததை அடுத்து பிசிசிஐ பிளான் பியை களமிறக்கியது. அதன்படி போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்தலாம். மும்பை மைதானத்தில் மட்டுமே போட்டிகளை நடத்தலாம் என்ற முடிவிற்கு பிசிசிஐ வந்தது.

ஆனால்
ஆனால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்த சமயத்தில் டெல்லி, ஹைதராபாத் அணியிலும் வீரர்களுக்கு கொரோனா வந்தது. அமித் மிஸ்ரா, சாகா உள்ளிட்ட வீரர்களுக்கும் கொரோனா வந்தது. இங்குதான் பிசிசிஐ தடுமாறி போனது. தொடரை தள்ளி வைப்பதை தவிர வேறு வழியே இல்லை என்ற முடிவிற்கு வந்தது.

மீட்டிங்
இதையடுத்து இன்று அவசரமாக மீட்டிங் நடத்தியது பிசிசிஐ. வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். இனியும் ரிஸ்க் எடுக்க முடியாது. தொடரை தள்ளி வைப்பது அவசியம் என்ற முடிவிற்கு பிசிசிஐ வந்தது. பல மாநில கிரிக்கெட் கிளப்களும் இதே கோரிக்கையை வைத்தது.

அரசியல் நெருக்கடி
வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் என்று வார்னிங் கொடுத்துள்ளனர். அதோடு அரசியல் ரீதியாகவும் சில நெருக்கடிகள் பிசிசிஐ அமைப்பிற்கு வந்ததாம். வெளிநாட்டு ஊடகங்கள், சில அரசியல் தலைவர்களும் ஐபிஎல் வேண்டாம் என்று கூறி உள்ளனர். இதையடுத்தே தொடரை தள்ளி வைக்கும் முடிவை எடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications