Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘பெரிய சல்யூட்’.. ஜாம்பவானே இதனை செய்ய முடியவில்லை.. பிரித்வி ஷாவின் ஆட்டத்தை மிரண்ட சேவாக் புகழாரம்

அகமதாபாத்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி அதிரடி காட்டிய பிரித்வி ஷாவின் ஆட்டத்தை பார்த்து சேவாக் வியப்படைந்துள்ளார்.

Recommended Video

Prithvi Shaw scores the fastest fifty of IPL 2021 | Oneindia Tamil

கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 154/6 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி அணி 16.3 ஓவர்களில் 156/3 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

மிரட்டிய பிரித்வி ஷா

மிரட்டிய பிரித்வி ஷா

டெல்லி அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர் பிரித்வி ஷாவின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது. அதிரடியாக ஆடிய அவர் 41 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். குறிப்பாக ஷிவம் மாவி வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் 6 பந்துகளிலும் பவுண்டரிகள் அடித்து அசத்தினார். ஐபிஎல்-ல் ரஹானேவுக்கு அடுத்ததாக ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

 சேவாக்கினாலே முடியவில்லை

சேவாக்கினாலே முடியவில்லை

இதுகுறித்து பேசியுள்ள சேவாக், ஓவரின் 6 பந்துகளிலும் பவுண்டரிகள் அடிக்க வேண்டும் என்றால் சரியாக கேப்பை பார்த்து ஷாட்ஸ் ஆட வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஆனால் பிரித்வி ஷா அதை செய்துள்ளார். நான் எனது கிரிக்கெட் வாழ்வில் ஓவரின் 6 பந்துகளிலும் பவுண்டரிகள் அல்லது சிஸ்கர்கள் அடிக்கவேண்டும் என நினைத்துள்ளேன். ஆனால் என்னால் முடியவில்லை. அதிகபட்சமாக 18 - 20 ரன்களே அடித்துள்ளேன்.

அந்த தைரியம்

அந்த தைரியம்

6 பவுண்டரிகளை அடிக்க சரியான டைமிங் மற்றும் கேப்பை பார்த்து ஆட வேண்டும். பவுலர் ஷிவம் மாவியுடன் இணைந்து பிரித்வி ஷா 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் ஆடியுள்ளார். எனவே அவர் எப்படி பந்துவீசுவார் என்பதை அறிந்து தைரியமாக செயல்பட்டார். ஆனால் அதுவும் எளிதல்ல. நான் அஷிஷ் நெஹ்ராவுக்கு எதிராக பலமுறை பயிற்சி மற்றும் உள்ளூர் ஆட்டங்களில் பேட்டிங் செய்துள்ளேன். ஆனாலும் என்னால் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அல்லது பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை.

சேவாக் வாழ்த்து

சேவாக் வாழ்த்து

சிறப்பாக ஆடிய பிரித்வி ஷா சதம் அடித்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். அவர் ஏற்கனவே கடினமான காலங்களை கடந்துவிட்டார். தற்போது நன்கு ரன்களை அடிக்க முடிகிறது. அவர் சதமடித்து அதன் மூலம் ஆட்டத்தை முடித்து வைத்திருக்க வேண்டும். எனினும் அற்புதமான பேட்டிங்கிற்கு வாழ்த்துக்கள் என சேவாக் தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, April 30, 2021, 17:43 [IST]
Other articles published on Apr 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+