Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் யார்? சேவாக்கின் வார்த்தைகளால் இளம் வீரர் குஷி..ஒரு போட்டிக்கே இப்படியா?

டெல்லி: சிஎஸ்கே அணியில் தோனியின் இடத்தை ருத்ராஜ் கெயிக்வாட் நிரப்புவார் என முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது ஓப்பனிங் வீரர்கள் டுப்ளசிஸ் மற்றும் ருத்ராஜ் கெயிக்வாட் ஆகும். இவர்கள் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டிற்கு 129 ரன்கள் சேர்த்தனர்.

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

குறிப்பாக இந்த போட்டியில் இளம் வீரர் ருத்ராஜ் கெயிக்வாட் ஆடிய விதம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. 44 பந்துகளை சந்தித்த அவர் 12 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் விளாசினார். இந்த சீசனில் சிறப்பான தொடக்கத்தை பெறாத கெயிக்வாட் கடந்த 3 போட்டிகளில் 64, 33, 75 என ரன்கள் அடித்து அதிரடி காட்டி வருகிறார். இதனால் மொத்தம் 192 ரன்களுடன் சிஎஸ்கேவில் அதிக ரன்கள் அடித்த 2வது வீரராக உள்ளார்.

தொடர் விமர்சனங்கள்

தொடர் விமர்சனங்கள்

இந்த ஐ.பி.எல் தொடரின் முதல் ஆட்டத்தில் இருந்தே ரன்கள் எடுக்க ருத்ராஜ் கெய்க்வாட் சிரமப்பட்டு வந்தார். அதுவும் பஞ்சாப்புக்கு எதிரான குறைந்த வெற்றியை இலக்கை நோக்கி அவர் மோசமாகி ஆடி அவுட்டாகிய விதம் சென்னை ரசிகர்களை எரிச்சலடைய செய்தது. இவரை தூக்கி விட்டு புஜாரா அல்லது உத்தப்பாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பல விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் தற்போது விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை கேப்டன்

சென்னை கேப்டன்

இந்நிலையில் இதுகுறித்து பேசிய சேவாக், ருத்ராஜ் கெயிக்வாட் சிஎஸ்கே அணியில் தொடர்ந்து இதே போல் ஆடிக்கொண்டு 2 ஆண்டுகள் இருந்தால், அவர்தான் அடுத்த கேப்டனாக முடியும். ருத்ராஜ் கெயிக்வாட்டை நான் நேரில் சந்தித்ததில்லை. அவரின் ஆட்டத்தை தனிப்பட்ட முறையில் பார்த்ததில்லை. ஆனால் நேற்று அவரின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது.

 கெயிக்வாட்டின் தகுதிகள்

கெயிக்வாட்டின் தகுதிகள்

அமைதியான மனநிலையில் எங்கு ரிஸ்க் எடுத்து அடிக்க வேண்டும் எங்கு நிதானமாக அட வேண்டும் நன்கு தெரிந்து செயல்பட்டார். அவர் தனது கடமையில் இருந்து தப்பி ஓடவில்லை. விக்கெட்டை சகஜமாக விட்டுக்கொடுக்கவில்லை. எனவே இந்த தகுதிகளை வைத்து பார்த்தால் அவர் நிச்சயம் சிஎஸ்கே கேப்டனாக ஆகலாம். உள்ளூர் போட்டிகளில் ருத்ராஜ் கெயிக்வாட் கேப்டனாக இருந்துள்ளார். அப்படியென்றால் சிகெஸ்கே அணியையும் வழிநடத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Story first published: Thursday, April 29, 2021, 16:15 [IST]
Other articles published on Apr 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+