நம்பிக்கை வைத்த ராகுல்.. தமிழருக்கு "கேப்பை" கொடுத்த கெயில்.. பஞ்சாப்பில் களமிறங்கும் சென்னை பையன்!
சென்னை: ராஜஸ்தான் அணிக்கு எதிராக இன்று நடக்கும் டி 20 போட்டியில் பஞ்சாப் அணியில் தமிழக வீரர் ஷாருக்கான் இடம்பெறுகிறார்.
பஞ்சாப் அணிக்கும் ராஜஸ்தானுக்கும் இடையிலான டி 20 போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் தற்போது பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இன்று ஆடும் பஞ்சாப் அணியில் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், நிக்கோலஸ் பூரான், தீபக் ஹூடா, ஷாருக்கான், ஜெய் ரிச்சர்சான், ரைலி மெரிடித், முகமது சாமி, அர்ஷிதீப் சிங் ஆகியோர் ஆடுகிறார்கள்.

எப்படி
இன்று பஞ்சாப் அணியில் தமிழக வீரர் ஷாருக்கான் இடம்பெற்றுள்ளார். சையது முஷ்டாக் கோப்பை தொடரில் இவர் தமிழக அணிக்காக ஆடினார். தமிழக அணியின் வெற்றிக்கு அந்த தொடரில் ஷாருக்கான் காரணமாக இருந்தார். இதையடுத்து பஞ்சாப் அணியால் இவர் ஏலம் எடுக்கப்பட்டார்.

பஞ்சாப்
பஞ்சாப் அணியால் 5.25 கோடி கொடுத்து ஷாருக்கான் எடுக்கப்பட்டார். பஞ்சாப் அணியில் பினிஷிங் செய்ய நல்ல வீரர்கள் இல்லை. அங்கு தற்போது மேக்ஸ்வெல்லும் இல்லை. இதனால் தற்போது ஷாருக்கானுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு
மேக்ஸ்வெல் இடத்தை நிரப்புவார் என்ற நம்பிக்கையில் ஷாருக்கானை ராகுல் களமிறக்கி உள்ளார். தனது முதல் போட்டியில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஷாருக்கான் இருக்கிறார். இன்று ஷாரூக்கானிடம் கெயில் பஞ்சாப் அணியின் கேப்பை கொடுத்து வரவேற்றார். கெயில்தான் ஷாருக்கானுக்கு ரோல் மாடல்.

ரோல்
அவரிடம் இருந்தே இன்று ஷாருக்கான் கேப்பை வாங்கியுள்ளார். ஷாருக்கான் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். முதல் தர போட்டிகளில் சிறப்பான ரெக்கார்ட் வைத்துள்ளார். சையது முஷ்டாக் கோப்பை தொடரில் ஷாருக்கான் பினிஷராக செயல்பட்டார். இன்றும் அவர் பினிஷராக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications