ஏமாத்திட்டாங்க.. டென்ஷனில் கத்திய ஷாருக்கான்.. டிகே & ரசல் மீது கடும் கோபம்.. நேற்று என்ன நடந்தது
சென்னை: நேற்று மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா தோல்வி அடைந்ததை அடுத்து அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தனது கோபத்தை கடுமையாக வெளிப்படுத்தி உள்ளார்.
கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று மும்பை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அல்வா மாதிரி கிடைத்த வெற்றிவாய்ப்பை நேற்று கொல்கத்தா அணி பறிகொடுத்தது. கொல்கத்தா ரசிகர்களை இந்த தோல்வி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
முதலில் பேட்டிங் இறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து 152 ரன்களை மட்டும் எடுத்தது. இந்த நிலையில் கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

எப்படி
நேற்று இந்த போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைய தினேஷ் கார்த்திக், ரசல், இயான் மோர்கன் ஆகியோர் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறார்கள். கொல்கத்தா அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்கள் இவர்கள்; இவர்களே கொஞ்சம் கூட பொறுப்பின்றி ஆடியது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.

மோசம்
அதிலும் இயான் மோர்கன் 7 பாலுக்கு 7 ரன், தினேஷ் கார்த்திக் 11 பாலுக்கு 8 ரன், ரசல் 15 பாலுக்கு 9 ரன்கள் எடுத்தது எல்லாம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. ஒப்பனர்கள் கஷ்டப்பட்டு ரன் அடித்து கொடுக்க மிடில் மற்றும் டெயில் எண்டர் வீரர்கள் மிக மோசமாக ஆடி தோல்வியை தழுவி உள்ளனர்.

ஷாருக்கான் கோபம்
நேற்று போட்டியை பார்த்து கொல்கத்தா ரசிகர்கள் எவ்வளவு அதிர்ச்சி அடைந்தார்களோ அதே அளவிற்கு கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கானும் அதிர்ச்சி அடைந்தார். நேற்றைய போட்டியை பார்த்து மிக மோசமாக டிவிட்டரில் கத்தி இருக்கிறார் ஷாருக்கான்.
டிவிட்
நேற்று ஷாருக்கான் செய்த டிவிட்டில்.. கொல்கத்தா அணியின் ஏமாற்றம் வருத்தம் அளிக்கிறது..அட்லீஸ்ட் கொல்கத்தா அணி தங்கள் ரசிகர்களிடம் இந்த தோல்விக்காக மன்னிப்பு கேட்கிறோம் என்று மிகவும் கோபமாக டிவிட் செய்துள்ளார்.

சொந்த அணி
பொதுவாக தனது சொந்த அணியை பற்றி இப்படி கோபமாக ஷாருக்கான் பேசியது இல்லை. ஆனால் நேற்று வெளிப்படையாக இப்படி கோபத்தை வெளிப்படுத்தினார். தினேஷ் கார்த்திக், ரசல், இயான் மோர்கன் போன்ற வீரர்களிடம் ஷாருக்கான் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால்தான் அவர் இப்படி டிவிட் செய்தார் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications