இது உங்க "ஹோம் கிரவுண்ட்".. இப்படியா ஆடுவீங்க?.. சிஎஸ்கே வீரருக்கு பறக்கும் வார்னிங்.. பின்னணி!
சென்னை: சிஎஸ்கே அணியில் இளம் பவுலர் ஷரத்துல் தாக்கூர் தொடர்ந்து நான்கு போட்டிகளாக பவுலிங்கில் சொதப்பி வருகிறார்.
Recommended Video
சென்னைக்கும் கொல்கத்தாவிற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்து இந்த போட்டியில் சிஎஸ்கே சிறப்பாக பேட்டிங் செய்தது.
ஆனால் பவுலிங்கில் சிஎஸ்கே கொஞ்சம் சொதப்பினாலும் கடைசி நேரத்தில் சிறப்பாக ஆடி, ரன் செல்வதை கட்டுப்படுத்தி ஆட்டத்தில் வெற்றிபெற்றது. சிஎஸ்கே அணி நேற்று எல்லா "டிபார்ட்மெண்ட்களிலும்" சிறப்பாக ஆடி இருந்தது.

நிலைமை
ஆனால் சிஎஸ்கே அணியின் பவுலர் ஷரத்துல் தாக்கூர் மட்டும் நேற்று மோசமாக பவுலிங் செய்தார். சிஎஸ்கே அணியில் இரண்டு பேர் மட்டுமே பார்ம் அவுட்டில் இருந்தனர். அதில் ரூத்துராஜ் நேற்று சிறப்பாக ஆடி பார்மிற்கு திரும்பினார். தொடர்ந்து அளிக்கப்பட்ட ஆதரவால் ரூத்துராஜ் பார்மிற்கு திரும்பினார்.

பார்ம்
ஆனால் ஷரத்துல் தாக்கூர் இன்னும் பார்மிற்கு திரும்பவில்லை. கடந்த 4 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே, ஒரே ஒரு விக்கெட்டை ஷரத்துல் தாக்கூர் எடுத்தார். வேறு எந்த போட்டியில் ஷரத்துல் தாக்கூர்சரியாக ஆடவில்லை. அதிக ரன்களை கொடுத்தாலும் விக்கெட் எடுக்கும் ஷரத்துல் தாக்கூர் தற்போது விக்கெட்டும் எடுக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார்.

ரன்கள்
நேற்று ஒரு யார்க்கர் கூட போட முடியாமல் 18வது ஓவரில் வரிசையாக வைட் போட்டு அதிர்ச்சி அளித்தார். ஒரு வைட் யார்க்கர் கூட போட முடியாமல் ஷரத்துல் தாக்கூர் திணறிக்கொண்டு இருக்கிறார். இந்த தொடரில் சிஎஸ்கே ஆடிய 4 போட்டிகளும் மும்பையில் நடந்தது ஆகும். இந்த மும்பை பிட்ச் ஷரத்துல் தாக்கூரின் ஹோம் மைதானம் ஆகும்.

ஹோம்
இங்குதான் ஷரத்துல் தாக்கூர் முதல் தர போட்டிகளில் ஆடி இருக்கிறார். ஷரத்துல் தாக்கூருக்கு இந்த பிட்ச் அத்துப்படி. இது அவருக்கு மிகவும் பழக்கமான பிட்ச் ஆகும். ஆனால் இங்கும் கூட இவர் மோசமாக திணறுவது விமர்சனங்களை சந்தித்துள்ளது.

நீக்க வேண்டும்
சிஎஸ்கேவில் எல்லோரும் பார்மிற்கு திரும்பிய நிலையில் இவர் மட்டும் இன்னும் பார்மிற்கு திரும்பாதது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரை அணியில் இருந்து நீக்க வேண்டும். ஹரி சங்கர் ரெட்டியை கொண்டு வர வேண்டும் என்று இப்போதே ரசிகர்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications