Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷாக்கிங்கில் பஞ்சாப் கிங்ஸ்.. ஷிகர் தவானின் காட்டடி.. கடின இலக்கை அசால்டாக எட்டிய டெல்லி கேப்பிடல்ஸ்

மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடின இலக்கை அசால்டாக துரத்தி வெற்றி பெற்றது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களுக்கு 195/4 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.2 ஓவர்களில் 199/4 எடுத்தது.

ஓப்பனிங்

ஓப்பனிங்

டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்கமே அதிரடி காத்திருந்தது. ஓப்பனிங் களமிறங்கிய மயங்க் அகர்வால் - கே.எல்.ராகுல் ஜோடி அதிரடி காட்டினர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் பஞ்சாப் அணி முதல் விக்கெட்டிற்கு 122 ரன்கள் சேர்த்தது.

கடின இலக்கு

கடின இலக்கு

சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் 36 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். அதே போல் கே.எல்.ராகுல் 61 ரன்கள் விளாசினார். இதனையடுத்து களமிறங்கிய கெயில் 11 ரன்களுக்கு வெளியேறினார். இதன் பின்னர் வந்த தீபக் ஹூடா (22) நிக்கோலஸ் பூரண் (9), ஷாருக்கான் (15) ரன் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.

ஓப்பனிங் அதிரடி

ஓப்பனிங் அதிரடி

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர். அதிரடியாக ஆடி 17 பந்துகளில் 32 ரன்கள் விளாசிய ப்ரித்வி ஷா அர்ஸ்தீப் சிங் பந்துவீச்சில் அவுட்டானார். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்களுக்கும், கேப்டன் ரிஷப் பண்ட் 15 ரன்களுக்கும் வெளியேறினர்.

வெற்றி

வெற்றி

மறுமுணையில் பொறுப்புடன் ஆடிய ஷிகர் தவான் 49 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 13 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கும். பின்னர் வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் ( 27) லலித் யாதவ் (12) ரன்கள் சேர்க்க 18.2 ஓவர்களிலேயே டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

Story first published: Saturday, May 29, 2021, 21:45 [IST]
Other articles published on May 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+