பாவம் எப்படி ஆகிட்டாரு.. படுத்த படுக்கையாக ஐபிஎல் கேப்டன்.. வைரலாகும் போட்டோ.. உருகும் பேன்ஸ்
டெல்லி: டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கையில் ஆபரேஷன் செய்து மருத்துவமனையில் ஓய்வு எடுக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் ஷ்ரேயாஸ் ஐயர். மும்பையை சேர்ந்த இவர் ஐபிஎல் தொடரிலேயே வயது குறைந்த கேப்டன் ஆவார். கடந்த சீசனில் டெல்லி அணியை இறுதி போட்டி வரை கொண்டு சென்றதில் இவரின் பங்கு அளப்பரியது.
எதிர்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்புள்ள வீரர்களில் ஒருவராக ஷ்ரேயாஸ் ஐயர் பார்க்கப்படுகிறார். ஆனால் கடந்த இரண்டு வருடமாக இவருக்கு பட்ட இடத்திலேயே அடிக்கடி காயம் ஏற்படுவதால் தொடர்ந்து நிலையான வாய்ப்புகள் கிடைப்பது இல்லை.

இடதுகை
கடந்த ஐபிஎல் தொடரின் போது கேட்ச் ஒன்றை பிடிப்பதற்காக இவர் எகிறி குதித்த போது இவரின் இடதுகையின் தோள்பட்டை விலகியது. அப்போது பாதியில் வெளியேறிய ஷ்ரேயாஸ் ஐயர் பெரும்பாலான போட்டிகளில் ஆடவில்லை. அப்போது தொடங்கிய பிரச்சனை ஷ்ரேயாஸ் ஐயருக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரிலும் இதேபோல் கையில் காயம் ஏற்பட்டது. அப்போதும் அதே இடத்தில் எலும்பு விலகியது. பீல்டிங் செய்த போது இவருக்கு எலும்பு விலகியது. அதோடு உள்ளே தசை பகுதியும் கொஞ்சம் கிழிந்தது. இதனால் களத்திலேயே துடித்த இவர் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிகிச்சை
இவருக்கு அப்போது சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் 5-6 மாதம் கிரிக்கெட் ஆட முடியாது என்று கூறினார்கள். மருத்துவமனையிலேயே முடங்கிய இவருக்கு தற்போது முதல் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. கையில் எலும்பு பாதிக்கப்பட்ட இடத்தில் நேற்று ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களுக்கு இவர் ரெஸ்ட் எடுக்க வேண்டும்.
ரெஸ்ட்
அதன்பின் மூன்று மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல், பெரிய அளவில் பயிற்சி மேற்கொள்ளாமல் ஓய்வு எடுக்க வேண்டும். இந்த நிலையில் நேற்று ஆபரேஷனுக்கு பின் ஷ்ரேயாஸ் ஐயர் தான் படுத்த படுக்கையாக இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். ஆப்ரேஷன் முடிந்துவிட்டது என்று இவர் உற்சாகமாக போட்டோவை போஸ்ட் செய்து இருந்தாலும் ரசிகர்கள் கமெண்ட் செக்சனில் வருந்தி உள்ளனர்.

வருத்தம்
நீங்கள் ஐபிஎல், டி 20 கோப்பையில் ஆட முடியாதது வருத்தம் அளிக்கிறது. சீக்கிரம் மீண்டும் வாருங்கள். சீக்கிரம் பழைய பிட்னாசோடு திரும்புங்கள். டெல்லி அணி நீங்கள் இல்லாமல் வலுவாக இல்லை என்று பலர் கமெண்ட் செய்துள்ளனர். இவரின் காயம் காரணமாக இந்த முறை டெல்லி அணியின் கேப்டனாக ரிஷாப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications