Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூப்பர்.. இதைத்தான் எதிர்பார்த்தோம்.. வலைப்பயிற்சியில் தோனி சொன்ன விஷயம்.. அப்ப அது நடந்திடுமோ?

சென்னை: சிஎஸ்கே கேப்டன் தோனி வரும் போட்டிகளில் தனது பேட்டிங் ஆர்டரை மாற்ற இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற திட்டத்துடன் சிஎஸ்கே களமிறங்கி உள்ளது. ரெய்னாவின் கம்பேக், மொயின் அலியை ஏலம் எடுத்தது என்று சிஎஸ்கே அணியின் பேட்டிங் ஆர்டர் புதிய பலம் பெற்றுள்ளது.

இன்னும் ஒரே ஒரு வெளிநாட்டு பாஸ்ட் பவுலர் இருந்தால் போதும் சிஎஸ்கே அணி முழுமையான பலம் கொண்ட அணியாக மாறிவிடும். ராஜஸ்தானுக்கு எதிரான அடுத்த போட்டிக்காக சிஎஸ்கே தற்போது தயாராகிக்கொண்டு இருக்கிறது.

எப்படி

எப்படி

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் தோனி தனது பேட்டிங் ஆர்டரை மாற்ற போவதாக தகவல்கள் வருகின்றன. தற்போது சிஎஸ்கேவில் ஜடேஜா இறங்கிய பின் தோனி இறங்குகிறார். அதன்பின் சாம் கரன், பிராவோ களமிறங்குகிறார்கள். ஆனால் இதைதான் தோனி மாற்றப்போகிறார்.

மாற்றம்

மாற்றம்

அதன்படி தோனி இனி சாம் கரனுக்கு அடுத்து களமிறங்குவார் என்று தகவல்கள் வருகின்றன. ஜடேஜா, சாம் கரன் இறங்கிய பின்பே தோனி இறங்குவார் என்கிறார்கள். சாம் கரன் நல்ல பார்மில் இருக்கிறார். இதனால் அவருக்கு புரோமோஷன் கொடுக்க தோனி திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள்.

கடந்த போட்டி

கடந்த போட்டி

இதனால்தான் பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியிலும் கூட சாம் கரன் ராயுடுவிற்கு பின் களமிறக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்பட்டார். சிஎஸ்கே தற்போது மேற்கொள்ளும் பயிற்சியிலும் இது தொடர்பாக தோனி அறிவுரைகளை வழங்கி உள்ளார். சாம் கரன் முன்பே களமிறங்குவார், அதற்கு ஏற்றபடி பயிற்சி மேற்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

நல்ல விஷயம்

நல்ல விஷயம்

இது ஒரு விதத்தில் நல்ல விஷயம் ஆகும். தோனி பின் ஆடுவார் என்ற நம்பிக்கையில் சிஎஸ்கேவின் இளம் வீரர்கள் தைரியமாக அடித்து ஆட முடியும். டு பிளசிஸ், ரூத்துராஜ், மொயின் அலி, ரெய்னா, ராயுடு, ஜடேஜா, சாம் கரன் என்று பேட்டிங் ஆர்டர் வலிமையாக இருக்கும்.. இதனால் தோனியின் முடிவு சரிதான் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

Story first published: Sunday, April 18, 2021, 11:53 [IST]
Other articles published on Apr 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+