Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர்தான் ஜாம்பவானா?.. திரும்பி ஊருக்கே போயிடுங்க பாஸ்.. நொந்து போன பண்ட்.. ஷாக்கிங் சம்பவம்

சென்னை: நேற்று டெல்லி அணியில் மூத்த வீரர் ஒருவர் ஆடிய விதத்தை பார்த்தது அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

பஞ்சாப்பிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று டெல்லி தனது அதிரடி பேட்டிங் மூலம் வெற்றிபெற்றது. டெல்லி அணியின் பவுலிங் மோசமாக இருந்தாலும் பேட்டிங் சிறப்பாக இருந்ததால், அந்த அணி எளிதாக 18.2 ஓவர்களிலேயே வெற்றிபெற்றது.

நேற்று முதலில் பேட்டிங் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 195 ரன்கள் எடுத்தது. இதையடுத்து டெல்லி வெறும் 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. நேற்று டெல்லி அணியில் ஸ்மித் மட்டுமே மோசமாக பேட்டிங் செய்தார்.

கோபம்

கோபம்

டெல்லி அணியில் ஆடும் வரும் ஸ்மித்திற்கு தொடக்கத்தில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இவருக்கு பதிலாக டெஸ்ட் ஜாம்பவான் ரஹானேதான் அணியில் எடுக்கப்பட்டார். ரஹானேவிற்கு இரண்டு போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர் சரியாக ஆடவில்லை என்றதும் ஸ்மித்திற்கு நேற்று அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

ஸ்மித்

ஸ்மித்

ஆனால் நேற்று நடந்த போட்டியில் ஸ்மித் சரியாக ஆடவில்லை. மிக மோசமாக டெஸ்ட் இன்னிங்ஸ்தான் ஸ்மித் ஆடினார். 12 பந்துகள் பிடித்த ஸ்மித் வெறும் 9 ரன்கள் எடுத்தார். நேற்று இவர் ஒரு பவுண்டரி, சிக்ஸர் கூட அடிக்கவில்லை.

ஆர்வம்

ஆர்வம்

கொஞ்சம் கூட ஆர்வமே இன்றி இவர் நேற்று மைதானத்தில் ஆடினார். டெஸ்ட் ஜாம்பவான் என்பதால் டெஸ்ட் போட்டி ஆடுவதை போலவே இவர் ஆடினார். இவரின் ஆட்டம் காரணமாக ஸ்மித் மீது பண்ட் மற்றும் டெல்லி நிர்வாகம் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மோசம்

மோசம்

நேற்று 190+ டார்கெட் இருந்த போதும் கூட இவர் மெதுவாக ஆடியதுதான் பண்டின் கோபத்திற்கு காரணம் ஆகும். அதேபோல் வலைப்பயிற்சியிலும் இவர் சரியாக ஆடுவது இல்லை. சர்வதேச டி 20 போட்டிகளிலும் ஸ்மித்தின் சமீபத்திய பார்ம் மோசமாகவே இருக்கிறது.

பார்மில் இல்லை

பார்மில் இல்லை

இதனால் ஜாம்பவான் என்று நம்பி ஸ்மித்தை தேவையின்றி அணியில் எடுத்துவிட்டோமோ, வேறு வெளிநாட்டு வீரரை எடுத்து இருக்கலாமோ என்று பண்ட் நொந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி அணியில் தற்போது ஒன் டவுன் இறங்க நல்ல பேட்ஸ்மேன்கள் இல்லை. ஸ்மித் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பையும் நேற்று சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

Story first published: Monday, April 19, 2021, 13:04 [IST]
Other articles published on Apr 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+