Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

22 வயது ஆந்திர வீரர்.. சிஎஸ்கே குறி வைத்த இளம் பவுலர்.. கிரீன் சிக்னல் தந்த தோனி.. செம டிவிஸ்ட்!

சென்னை: சிஎஸ்கே அணியில் விரைவில் இளம் புதிய பவுலர் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன. அவரின் முதல் ஐபிஎல் தொடராக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

CSK வெற்றிப்பயணம் தொடருமா? Chennai-Mumbaiயின் Predictable Playing 11 | OneIndia Tamil

சிஎஸ்கே அணியில் பொதுவாக இளம் வீரர் ஒருவர் அறிமுகம் ஆவது என்பது மிகவும் கடினமான விஷயம். அதிலும் சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரருக்கு தோனி பெரிதாக வாய்ப்பு கொடுக்க மாட்டார்.

சிஎஸ்கேவில் வாட்சன் சொதப்பி, ஓப்பனிங் மோசமான காரணத்தால் மட்டுமே ரூத்துராஜூக்கு அணியில் அறிமுகம் ஆக வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒருமுறை வாய்ப்பு கிடைத்துவிட்டால் அதன்பின் அந்த வீரருக்கு தொடர்ந்து சிஎஸ்கேவில் ஆதரவு அளிக்கப்படும்.

ரெஸ்ட்

ரெஸ்ட்

இந்த நிலையில் தற்போது சிஎஸ்கேவில் ஷரத்துல் தாக்கூர் மோசமாக பவுலிங் செய்து வருகிறார். கடந்த 6 போட்டிகளாக விக்கெட் எடுக்க முடியாமல் திணறுகிறார். அவரின் சொந்த ஊர் பிட்சான மும்பை பிட்சில் கூட விக்கெட் எடுக்க முடியாமல் ஷரத்துல் தாக்கூர் தொடர்ந்து சொதப்பிக் கொண்டு இருக்கிறார்.

வாய்ப்பு

வாய்ப்பு

இதனால் அவர் மீண்டும் பார்மிற்கு திரும்ப ஓய்வு அவசியம் ஆகிறது. சில போட்டிகளில் ஓய்வு பெற்றால் மட்டுமே ஷரத்துல் தாக்கூர் மீண்டும் பார்மிற்கு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதனால் அவருக்கு பதிலாக இனி வரும் போட்டிகளில் சிஎஸ்கே முக்கியமான ஒரு வீரரை அறிமுகப்படுத்தும் என்று தகவல்கள் வருகின்றன.

டெஸ்ட்

டெஸ்ட்

சிஎஸ்கேவில் ஆந்திராவை சேர்ந்த 22 வயது இளம் பவுலர் ஹரி சங்கர் ரெட்டி ஆடி வருகிறார். இவரை சிஎஸ்கே அணி டெஸ்ட் செய்து பார்க்கும் என்கிறார்கள். வாட்சன் சொதப்பிய போது ரூத்துராஜை வைத்து டெஸ்ட் செய்தனர். அது பலன் கொடுத்தது.

ஹரி சங்கர்

ஹரி சங்கர்

அதேபோல் ஹரி சங்கர் ரெட்டியை சிஎஸ்கேவில் களமிறக்க தோனி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. இவரை களமிறக்க தோனி ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன. இந்திய பாஸ்ட் படை சிஎஸ்கேவில் அவ்வளவு சிறப்பாக இல்லை.

யார்க்கர்

யார்க்கர்

நினைத்த நேரத்தில் டெத் ஓவர்களில் யார்க்கர் வீசும் வீரர்கள் இல்லை. இதனால் ஹரி சங்கர் ரெட்டியை கொண்டு வர தோனி நினைக்கிறார். இவர் பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக யார்க்கர், பவுன்சர் வீசினார். இதன் காரணமாக இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்கிறார்கள்.

Story first published: Saturday, May 1, 2021, 11:19 [IST]
Other articles published on May 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+