Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ விதித்த காலக்கெடு.. ஐபிஎல் அணிகளுக்கு வந்தது புது தலைவலி.. தற்போதைக்கு முடியாது போல!

மும்பை: ஐபிஎல் அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய ஆப்பு ஒன்றை வைத்துள்ளது. இதனால் அணி நிர்வாகங்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தடைபட்டுள்ள ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகளில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே 29 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் மீதம் 31 போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படவுள்ளதாக கடந்த மே 29ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ ஆலோசனைக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஐபிஎல் தொடர் மீண்டும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி, இறுதிப்போட்டி வரும் அக்டோபர் 15ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் செப்.14ம் தேதி முடிவடைகிறது. எனவே வீரர்களை அமீரகம் அழைத்து ஏற்பாடுகளை செய்ய நேரம் சரியாக இருக்கும் எனத்தெரிகிறது.

பயிற்சிகள் தொடக்கம்

பயிற்சிகள் தொடக்கம்

ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளும் பயிற்சி முகாம்களை தொடங்கிவிட்டன. இரு அணிகளும் ஏற்கனவே அமீரகம் சென்றடைந்தது மட்டுமின்றி தங்களது குவாரண்டைன் காலத்தையும் முடித்து தற்போது முதற்கட்ட பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

புதிய சிக்கல்

புதிய சிக்கல்

இந்நிலையில் ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ புதிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. அதாவது அனைத்து அணிகளும், தங்களது முழு வீரர்களின் பட்டியலையும் உறுதி செய்து, இன்று மாலை 5 மணிக்குள் ஒப்படைக்குமாறு பிசிசிஐ அறிவித்திருந்தது. ஆனால் பல்வேறு அணிகளும் அதனை செய்யாமல் உள்ளன. இதற்கு காரணம் அயல்நாட்டு வீரர்கள் பங்கேற்பதில் நிலவும் சிக்கல்.

நீடிக்கும் சிக்கல்

நீடிக்கும் சிக்கல்

ஐபிஎல் தொடர் வரும் அக்டோபர் 14ம் தேதியன்று தான் முடிவடைகிறது. இது முடிந்த அடுத்த 3 நாட்களில், அதாவது அக்டோபர் 17ம் தேதி முதல் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. எனவே இதற்கு தயாராகும் நோக்கில் அயல்நாட்டு அணிகள் சர்வதேச தொடர்களை ஏற்பாடு செய்து வருகிறது. வீரர்கள் தேசத்திற்காக பங்குபெறுவதா, அல்லது ஐபிஎல் தொடரில் விளையாடுவதா என்ற குழப்பத்தில் உள்ளனர். இதனால் அணி வீரர்களின் பட்டியலை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை

நடவடிக்கை

தற்போது வரை சிஎஸ்கே அணி மட்டும் தான் முழு வீரர்களின் பங்கேற்பையும் உறுதி செய்துள்ளது. குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணி, ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் இன்னும் அணி வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனவே பிசிசிஐ-ம் வீரர்கள் குறித்த பட்டியலை வழங்குவதற்கு மேலும் கால அவகாசம் கேட்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Friday, August 20, 2021, 18:13 [IST]
Other articles published on Aug 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+