திடீர் நெஞ்சுவலி.. சன் ரைசர்ஸ் கோச் முத்தையா முரளிதரன் சென்னை மருத்துவமனையில் அனுமதி.. சிகிச்சை
சென்னை: நேற்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்தையா முரளிதரனுக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
Recommended Video
ஐபிஎல் தொடரில் ஆடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இலங்கை லெஜண்ட் முத்தையா முரளிதரன் செயல்பட்டு வருகிறார். ஹைதராபாத் அணி தற்போது சென்னையில் தங்கி கிரிக்கெட் பயிற்சிகளை செய்து வருகிறது.
ஹோம் மைதானம் கிடையாது சென்னையில்தான் ஹைதராபாத் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று பயிற்சியின் போது முத்தையா முரளிதரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

நெஞ்சு வலி
நேற்று பயிற்சியின் இடைவெளியில் முத்தையா முரளிதரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவசரமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காரிடியாக் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

தீவிர சிகிச்சை
இலங்கையிலேயே இவருக்கு நெஞ்சில் வலி இருந்துள்ளது. இதையடுத்து அவர் தீவிர சோதனைகளை செய்து இருக்கிறார். ஸ்கேன் எடுத்து இருக்கிறார். அதன்பின் சென்னைக்கு ஐபிஎல் ஆட வந்துள்ளார்.

ஐபிஎல்
இந்த நிலையில் சென்னையில் இவருக்கு மீண்டும் சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் அவரின் ரத்த குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சை
நேற்று முத்தையா முரளிதரனுக்கு செய்யப்பட்டபி ஆஞ்சியோபிளாஸ்டி வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதையடுத்து தற்போது அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார்கள். ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் ஹைதராபாத் அணிக்கு இவர் பயிற்சி வழங்குவது சந்தேகம்தான் என்று தகவல்கள் வருகின்றன.


Click it and Unblock the Notifications