For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி எதுவும் செய்ய முடியாது.. கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்த வார்னர்.. முடிகிறது கேப்டன் கதை?

சென்னை: ஹைதராபாத் அணி 2021 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக ஆடி வருகிறது. அணியின் கேப்டன் வார்னருக்கு இது மிகப்பெரிய பிரச்சனையாகி உள்ளது.

2021 ஐபிஎல் தொடர் ஹைதராபாத் அணிக்கு கெட்ட கனவாக மாறியுள்ளது. வரிசையாக 3 போட்டிகளில் தோல்வி அடைந்து அந்த அணி அதிர்ச்சி அளித்துள்ளது.

ஹைதராபாத் அணி தோல்வி அடைந்த மூன்று போட்டிகளும் சென்னை பிட்சில் நடந்த போட்டிகள். சேப்பாக்கத்தில் ஹைதராபாத் ஆட முடியாமல் கடுமையாக திணறி வருகிறது.

ஹைதராபாத்

ஹைதராபாத்

சென்னை பிட்சில் எப்படி ஆடுவது, இரண்டாவது இன்னிங்சில் எப்படி திட்டங்களை வகுப்பது என்று தெரியாமல் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் கடுமையாக குழம்பி வருகிறார். இதுதான் மூன்று போட்டியிலும் ஹைதராபாத் தோல்வி அடைய முக்கிய காரணம். இதுவரை பெங்களூர், கொல்கத்தா, மும்பை ஆகிய மூன்று அணிகளிடம் ஹைதராபாத் தோல்வி அடைந்துள்ளது.

வெற்றி வாய்ப்பு

வெற்றி வாய்ப்பு

மூன்று போட்டிகளுமே கிட்டத்தட்ட ஹைதராபாத் அணிக்கு வெற்றிவாய்ப்பு இருந்த போட்டிகள் ஆகும். ஆனால் மோசமான பேட்டிங் காரணமாக அந்த அணி சொதப்பி தோல்வி அடைந்தது. இதனால் தற்போது வார்னரின் கேப்டன்சி கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.

அணி தேர்வு

அணி தேர்வு

வார்னரின் அணி தேர்வு மூன்று போட்டிகளிலும் மோசமாக இருந்தது. டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடும் மணீஷ் பாண்டேவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்குகிறார். கேன் வில்லியம்சனை தொடர்ந்து அணியில் எடுக்காமல் புறக்கணிக்கிறார். இது போக பவுலர்களை தேவையின்றி அடிக்கடி மாற்றுகிறார்.

நடராஜன்

நடராஜன்

நேற்று போட்டியில் நடராஜனை கூட வார்னர் எடுக்கவில்லை. வீரர்களை நம்புவது இல்லை. பீல்டிங் செட்டப் தொடங்கி பவுலிங் ரொட்டேஷன் வரை அனைத்திலும் வார்னர் மோசமாக இருக்கிறார்.

கண்ணை மூடிக்கொண்டு

கண்ணை மூடிக்கொண்டு

நேற்றும் கூட பாதி போட்டிக்கு பின் என்ன செய்வது என்று தெரியாமல் வார்னர் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்துவிட்டார். இதனால் வார்னர் மீது ஹைதராபாத் அணி நிர்வாகம் கோபமாக இருக்கிறது. இவரின் கேப்டன்சி மீது அணி நிர்வாகத்திற்கு சந்தேகம் வந்துள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் இருக்கிறார். 2018ல் ஹைதராபாத் அணியை பைனல் வரை கொண்டு சென்றார். இவரை அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும், வார்னர் பதவி விலக வேண்டும் என்று ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் இப்போதே கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.

Story first published: Sunday, April 18, 2021, 11:52 [IST]
Other articles published on Apr 18, 2021
English summary
IPL 2021: SRH fans are asking Kane Williamson to replace Warner as the captain
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+