விரக்தி.. தலையில் அடித்துக்கொண்டு.. காவ்யா தந்த "அந்த" ரியாக்சன்.. நேற்று மேட்சில் இதை கவனிச்சீங்களா
சென்னை: நேற்று பெங்களூருக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த போது அணியின் உரிமையாளர் காவ்யா கலாநிதி மாறன் கோபத்துடன் காணப்பட்டார்.
நேற்று பெங்களூருக்கும் ஹைதராபாத்திற்கும் இடையிலான ஆட்டம் கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது. சென்னையில் நடந்த இந்த போட்டியில் ஜெயிக்க வாய்ப்பு இருந்தும் கூட ஹைதராபாத்.. ஐயோ 2 பாய்ண்ட் வேண்டாம்.. நீங்களே எடுத்துக்கோங்க என்று வெற்றியை தூக்கி பெங்களூர் கையில் கொடுத்துள்ளது.
நேற்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 20 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து 149 எடுத்தது. இதையடுத்து பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து வெறும் 143 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

நேற்று
நேற்று பெங்களூருக்கு எதிராக வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் கூட ஹைதராபாத் தோல்வி அடைந்தது. முதலில் ஆட்டம் ஹைதராபாத் வசம்தான் இருந்தது. ஆனால் பிரைஸ்டோ அவுட் ஆன பின் வரிசையாக விக்கெட்டுகள் விழா தொடங்கியது. பிரைஸ்டோ அவுட்டான அடுத்த பாலே மணீஷ் பாண்டே அவுட் ஆனார்.

காவ்யா
இந்த போட்டியை சன் ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா கலாநிதி மாறன் நேரில் பார்த்தார். முதலில் பிரைஸ்டோ விக்கெட் விழுந்த போது காவ்யா அதை பார்த்து கவலைப்படவில்லை. மணீஷ், சமத், ஹோல்டர், ரஷீத் என்று நல்ல பேட்டிங் ஆர்டர் அதற்கு பின்பும் இருந்தது.

மணீஷ்
ஆனால் மணீஷ் பாண்டேவும் அடுத்த பந்தில் அவுட் ஆனதும், தலையில் கை வைத்து காவ்யா அடித்துக்கொண்டார். பின் அதே ஓவரில் சமத் அவுட் ஆனதும் காவ்யா கோபத்தின் உச்சிக்கே சென்று, முகத்தில் வெளிப்படையாக கோபத்தை காட்டினார். முகத்தில் எல்லா ரியாக்சனையும் வெளிப்படையாக காட்டினார்.

வெளிப்படை
வெற்றிபெற வேண்டிய ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் ஹைதராபாத் வீரர்கள் மீது காவ்யா கோபத்தில் இருக்கிறார். ஹைதராபாத் அணியில் மணீஷ் பாண்டேவின் ஸ்டிரைக் மிகவும் மோசமாக இருக்கிறது. அதேபோல் மிடில் ஆர்டரில் விஜய் சங்கரின் பேட்டிங்கும் மோசமாக இருக்கிறது.

ஆக்சன்
ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் இல்லாததும் சர்ச்சையாகி வருகிறது. கடந்த போட்டியிலும் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்துவிட்டது. இதனால் கண்டிப்பாக அடுத்த போட்டிக்கு முன்பாக அணி நிர்வாகம் வீரர்கள் மீது ஆக்சன் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது


Click it and Unblock the Notifications