அந்த முகத்தை பாருங்க.. இவருக்காகவாது அடுத்த மேட்ச் ஜெயிக்கணும்.. கொதிக்கும் பேன்ஸ்.. என்ன ஆச்சு?
சென்னை; ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஒவ்வொரு போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணி வெற்றிபெறும் என்று நம்பிக்கையோடு மைதானத்திற்கு வந்து.. ஏமாற்றத்தோடு திரும்பி செல்வது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
2021 ஐபிஎல் தொடரில் ஹைதாராபாத் அணி மோசமாக ஆடி வருகிறது. இதுவரை 3 போட்டிகளில் ஆடி, மூன்றிலும் அந்த அணி மோசமாக தோல்வி அடைந்துள்ளது.
வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் கூட சில போட்டிகளில் ஹைதராபாத் அணி மோசமாக சொதப்பி தோல்வி அடைந்தது.

எப்படி
அதிலும் நேற்று மும்பைக்கு எதிரான போட்டியிலும், அதற்கு முன் பெங்களூருக்கு எதிரான போட்டியிலும் ஹைதராபாத் அணிக்கு வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் கடைசியில் ஹைதராபாத் அணியின் பேட்டிங் சொதப்பியது. இதனால் கடைசியில் நூலிழையில் அந்த அணி வெற்றியை நழுவவிட்டது.

ஏமாற்றம்
முதல் 15 ஓவர்களில் ஹைதராபாத் அணி வெற்றிபெறும் சூழ்நிலையில்தான் இருக்கும். ஆனால் டெத் ஓவர்களில் மோசமாக ஆடி ஹைதராபாத் அணி தோல்வி அடைகிறது. இதனால் ஒவ்வொரு போட்டியிலும் ஹைதராபாத் வெற்றிபெறும் என்று நம்பிக்கையுடன் வரும் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன்.. ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்.

மோசம்
அதிலும் கடந்த இரண்டு போட்டிகளில் ஹைதராபாத் வெற்றிபெறும் என்று நம்பிக்கையுடன் இருந்த காவ்யா மாறன், மிடில் ஓவர்களில் வீரர்கள் ஆடிய விதத்தை பார்த்து ஏமாற்றம் அடைந்தார். பெங்களூருக்கு எதிரான போட்டியில் தலையில் அடித்துக்கொண்டு காவ்யா மாறன், நேற்று நடந்த போட்டியிலும் அதிர்ச்சியாக மைதானத்தில் உறைந்தபடி உட்கார்ந்து இருந்தார்.

அதிர்ச்சி
இவர் அதிர்ச்சியோடு உட்கார்ந்து இருக்கும் புகைப்படங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அணியின் உரிமையாளர் ஒவ்வொரு போட்டியிலும் வந்து தனது அணிக்கு ஆதரவு தருகிறார். ஆனால் சன்ரைசர்ஸ் அணி எந்த போட்டியிலும் ஜெயிப்பது இல்லை. இவருக்காகவாவது அடுத்த போட்டியில் ஏஆர்எச் ஜெயிக்க வேண்டும் என்று அந்த அணியின் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications