Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காலில் ஆபரேஷன்.. நடராஜன் வெளியிட்ட புகைப்படம்.. இந்த சீசனில் இனி ஆடுவதே சந்தேகம்தான்.. என்ன ஆச்சு?

சென்னை: ஐபிஎல் தொடரில் காயம் அடைந்த தமிழக வீரர் நடராஜனுக்கு காலில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த தொடரில் மீதம் உள்ள போட்டிகளில் அவர் ஆடுவது சந்தேகம் ஆகியுள்ளது.

Recommended Video

Natarajan-க்கு முழங்கால் Operation..நலமுடன் இருப்பதாக Tweet | Oneindia Tamil

2021 ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் நடராஜன் ஹைதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். முதல் இரண்டு போட்டிகளில் இவர் சிறப்பாக ஆடினார்.

இரண்டு போட்டிகளில் 2 விக்கெட் எடுத்தார். அதோடு டெத் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்தார். ஆனால் அதன்பின் இவர் அணியில் எடுக்கப்படவில்லை.

ஏன்

ஏன்

திடீரென மொத்தமாக இவர் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். இவருக்கு பதிலாக கலீல் அகமது தொடர்ந்து அணியில் எடுக்கப்பட்டார். நடராஜன் முதலில் நீக்கப்பட்டதற்கு முறையான காரணம் சொல்லப்படவில்லை.

காயம்

காயம்

பின்னர் அவருக்கு காயம் என்று கூறப்பட்டது. நடராஜன் முட்டியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஓய்வில் இருக்கிறார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தன.

ஆபரேஷன்

ஆபரேஷன்

இந்த நிலையில் தற்போது நடராஜனுக்கு காலில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. இவர் ஆபரேஷன் செய்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக டிவிட் செய்த நடராஜன் எனக்கு முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது, எனக்கு உறுதுணையாக இருந்த பிசிசிஐ, மருத்துவர்கள், நிர்வாகிகள் எல்லோருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

சந்தேகம்

சந்தேகம்

இதனால் நடராஜன் இந்த ஐபிஎல் தொடரில் ஆடுவது சந்தேகம் ஆகியுள்ளது. இவர் இன்னும் சில நாட்கள் ஓய்வில் இருப்பார். பின்னர் பெங்களூரில் பயிற்சி மேற்கொள்வார். அதன்பின் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதால் இவர் மீண்டும் ஹைதராபாத் அணியில் இணைவதற்குள் ஐபிஎல் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

Story first published: Tuesday, April 27, 2021, 17:59 [IST]
Other articles published on Apr 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+