Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னருக்கு அடுத்து அவருதான் டார்கெட்.. பார்வையை திருப்பும் ரசிகர்கள்.. பதற்றத்தில் முக்கிய வீரர்!

அகமதாபாத்: ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியிலிருந்து வார்னர் நீக்கப்பட்டது மற்றொரு அணி கேப்டனுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடர் தோல்விகளை அடுத்து அந்த அணி நிர்வாகம் டேவிட் வார்னரை கேப்டன்சியில் இருந்து நீக்கியுள்ளது.

டேவிட் வார்னருக்கு பதிலாக இனி கேன் வில்லியம்சன் கேப்டனாக செயல்படுவார் என ஐதராபாத் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர் தோல்விகள்

தொடர் தோல்விகள்

கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தால் ஆடி ப்ளே ஆஃப் வரை சென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு இந்தாண்டு மிக மோசமாக அமைந்ததுள்ளது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

புதிய கேப்டன்

புதிய கேப்டன்

இதனால் இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட முடிவெடுத்த ஐதராபாத் அணி டேவிட் வார்னரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனை புதிய கேப்டனாக நியமியத்துள்ளது. நாளை நடைபெறும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முதல் வில்லியம்சனே ஐதராபாத் அணியை வழிநடத்துவார் என்று கூறியுள்ளது.

திடீர் திருப்பம்

திடீர் திருப்பம்

இந்நிலையில் ரசிகர்களின் பார்வை தற்போது கொல்கத்தா அணியின் பக்கம் திரும்பியுள்ளது. கொல்கத்தா அணியும் இந்தாண்டு படு சொதப்பலாக விளையாடி வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக அந்த அணியின் பேட்டிங் வரிசை மிக மோசமாக உள்ளது. பொறுப்பாக ஆட வேண்டிய கேப்டன் மோர்கனே 7 போட்டிகளில் 92 ரன்களே அடித்துள்ளார்.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

இதனால் மோர்கனை கேப்டன் பதவயில் இருந்து நீக்கிவிட்டு மீண்டும் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கடந்தாண்டு தொடரின் பாதியில் தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு மோர்கனை அந்த அணி கேப்டனாக நியமித்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, May 1, 2021, 18:31 [IST]
Other articles published on May 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+