Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நடராஜனே இருந்திருக்கலாம்.. செம கடுப்பில் ஹைதராபாத் டீம்.. மொத்தமாக அடங்கிய வார்னர்.. என்ன ஆச்சு?

சென்னை: ஹைதராபாத் அணியில் நடராஜன் இல்லாத நிலையில் அந்த அணியின் பவுலிங் ஆர்டர் மிக மோசமாக வலிமை இழந்துள்ளது.

Recommended Video

உண்மையை உடைத்த Warner..SRH அணிக்குள் பிளவா? | Oneindia Tamil

2021 ஐபிஎல் தொடர் ஹைதராபாத் அணிக்கு மோசமான தொடராக அமைந்துள்ளது. மிகவும் வலிமையான அணி என்று கருதப்பட்ட ஹைதராபாத் அணி இந்த முறை மோசமாக சொதப்பி உள்ளது.

இதுவரை மொத்தம் 6 போட்டிகளில் ஹைதரபாத் அணி ஆடி உள்ளது. இதில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே அந்த அணி வெற்றிபெற்றுள்ளது.

 வெற்றி

வெற்றி

ஹைதராபாத் அணியின் தோல்விக்கு, அந்த அணியின் பவுலிங் ஆர்டர் சொதப்பியதும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் பார்மில் இல்லை. இன்னொரு பக்கம் சந்தீப் சர்மாவும் பார்மில் இல்லை.

பார்ம்

பார்ம்

இதெல்லாம் போக ஒரு பக்கம் நடராஜன் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு இப்போதுதான் காலில் ஆபரேஷன் செய்யப்பட்டது. இதனால் அவரால் இந்த தொடரில் மீதம் உள்ள போட்டிகளில் ஆட முடியாத நிலை உள்ளது.

மோசம்

மோசம்

இதன் காரணமாக இந்த முறை நடராஜனுக்கு பதிலாக கலீல் அகமது ஆடி வருகிறார். ஆனால் ஒரு போட்டியில் நன்றாக ஆடிய கலீல் அதன்பின் எந்த போட்டியிலும் சரியாக ஆடவில்லை. தொடர்ந்து சொதப்பி வருகிறார். நேற்று போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் ஒரு ஓவருக்கு 9 ரன்கள் கொடுத்தார்.

கலீல்

கலீல்

இதனால் நடராஜனே இருந்திருக்கலாம் என்று ஹைதராபாத் அணி புலம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. வார்னரும் அணியில் இனி மாற்றம் எதையும் செய்ய முடியாமல் அடங்கி போய் உள்ளார். இந்த சீசனுக்கு பின் வார்னர் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நீடிப்பதே சந்தேகமாகி உள்ளது.

Story first published: Thursday, April 29, 2021, 17:30 [IST]
Other articles published on Apr 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+