Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஈகோ போதும்.. உடனே அவரை கொண்டு வாங்க.. மூத்த வீரரை ஒதுக்கிய வார்னர்.. ஹைதராபாத்துக்குள் மோதல்?

சென்னை: பெங்களூர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று ஹைதராபாத் தோல்வி அடைய அந்த அணியின் அணி தேர்வும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியும் இந்த முறை பல்வேறு டிவிஸ்ட்களுடன் முடிந்து கொண்டு இருக்கிறது. இதுவரை நடந்த எல்லா போட்டியும் கிட்டத்தட்ட கடைசி 4 ஓவரில்தான் மாறியது. அதிலும் கடந்த இரண்டு போட்டிகள் சீட் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் திரில்லர் படம் போல இருந்தது.

நேற்றும் கூட டாஸ் தோல்வி அடைந்து, முதலில் பேட்டிங் இறங்கிய பெங்களூர் 20 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து 149 எடுத்தது. இதையடுத்து ஹைதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து வெறும் 143 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

தோல்வி

தோல்வி

நேற்று ஹைதராபாத் வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் தோல்வி அடைய அந்த அணியின் அணி தேர்வே காரணமாக இருந்தது. ஹைதராபாத்தை அணியின் மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று ஆட கூடிய வீரர்கள் இல்லை. பிரைஸ்டோ அவுட் ஆனால், அணியை கடைசி வரை நின்று ஜெயிக்க வைக்க கூடிய ஆட்கள் யாரும் அணியில் இல்லை.

பேட்டிங்

பேட்டிங்

நேற்று ஹைதராபாத் அணியில் நபிக்கு ஹோல்டர் எடுக்கப்பட்டார். ஆனால் இவர் கடைசி வரை நிலையாக நின்று ஆட கூறிய வீரர் கிடையாது. ரஷீத் கானும் அதிரடியாக ஆடினாலும் நீண்ட நேரம் நிற்க மாட்டார். விஜய் சங்கரை நம்ப முடியாது. சமத் இப்போதுதான் வளர்ந்து வருகிறார்.

ஹோல்டர்

ஹோல்டர்

நேற்று போட்டியில் ஹோல்டருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் எடுக்கப்பட்டு இருந்தால் ஹைதராபாத் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும். வில்லியம்சன் பல போட்டிகளில் ஹைதராபாத் அணியை கடைசி நொடியில் வெற்றி பெற வைத்துள்ளார். "ஆன்கர்" இன்னிங்ஸ் ஆடி ஹைதராபாத் அணியை சரிவில் இருந்து மீட்டு இருக்கிறார்.

இரண்டு மேட்ச்

இரண்டு மேட்ச்

ஆனால் வார்னர் எனோ இவருக்கு இரண்டு போட்டிகளாக அணியில் வாய்ப்பு கொடுக்கவில்லை. வில்லியம்சன் இன்னும் ரெடியாகவில்லை. அதனால் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் இந்த புறக்கணிப்புதான் தற்போது ஹைதராபாத் அணிக்கு எதிராக திரும்பி உள்ளது.

வில்லியம்சன்

வில்லியம்சன்

நேற்று வில்லியம்சன் இருந்திருந்தால் மிடில் ஆர்டர் சரிந்து இருக்காது. வார்னருக்கும் வில்லியம்சனுக்கும் ஈகோ மோதல் என்று தகவல்கள் வருகின்றன. இதுதான் அவரின் புறக்கணிப்பிற்கும் காரணம் என்று கூறப்படுகிறது. அப்படி ஏதாவது மோதல்கள் இருந்தால் உடனே வார்னர் அதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு வில்லியம்சனுக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

Story first published: Thursday, April 15, 2021, 17:48 [IST]
Other articles published on Apr 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+