Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவில் மீண்டும் திரும்பிய 2 முக்கிய வீரர்கள்... ரிஸ்க் எடுத்த ஐதராபாத் அணி.. ப்ளேயிங் 11

டெல்லி: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணி 4 வெற்றிகளுடன் 2வது இடத்திலும், ஐதராபாத் அணி 1 வெற்றியுடன் கடைசி இடத்திலும் உள்ளது.

சென்னை அணி

சென்னை அணி

இந்த போட்டிக்காக சென்னை அணியில் 2 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் வாய்ப்பு பெற டுவைன் பிராவோ மற்றும் இம்ரான் தாஹீர் மீண்டும் உட்காரவைக்கப்பட்டனர் லுங்கி நெகிடி, மற்றும் மொயின் அலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். மொயின் அலி காயத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்துள்ளார்.

 ப்ளேயிங் 11:

ப்ளேயிங் 11:

ப்ளேயிங் 11: ருத்துராஜ் கெயிக்வாட், டூப்ளசிஸ், மொயின் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, ரவீந்திர ஜடேஜா, சாம் கரண், ஷர்துல் தாக்கூர், லுங்கி நெகிடி, தீபக் சஹார்

 ஐதராபாத்:

ஐதராபாத்:

இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஐதராபாத் அணி 2 மாற்றங்களை செய்துள்ளது. சரியாக ஆடவில்லை என கடந்த சில போட்டிகளில் உட்காரவைக்கப்பட்ட மணிஷ் பாண்டே மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இது போன்ற முக்கிய போட்டியில் மீண்டும் மணிஷ் பாண்டேவை நம்பி ஐதராபாத் அணி ரிஸ்க் எடுத்துள்ளது. அதே போல பந்துவீச்சில் சந்தீப் ஷர்மா வாய்ப்பு பெற்றுள்ளார். அபிஷேக் சர்மா, மற்றும் விராட் சிங் ஆகியோர் உட்கார வைக்கப்பட்டுள்ளனர்.

ப்ளேயிங் 11:

ப்ளேயிங் 11:

டேவிட் வார்னர், பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ரஷித் காண், ஜகதீசா சுஜித், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது, சித்தார்த் கவுல்

Story first published: Wednesday, April 28, 2021, 19:38 [IST]
Other articles published on Apr 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+