Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்பிக்கை நட்சத்திரமே இல்லை பெரிய ரிஸ்க் எடுத்த ஐதராபாத்.. ராஜஸ்தானுக்கு எதிராக அதிரடி மாற்றங்கள்!

அகமதாபாத்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் தொடரின் 28வது லீக் ஆட்டத்தில் இன்று ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் மோதுகிறது.

இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில் முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது.

ஐதராபாத் அணி

ஐதராபாத் அணி

இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் சமீபத்தில் டேவிட் வார்னரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய கேப்டனாக வில்லியம்சன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த போட்டிக்காக 3 மாற்றங்களை செய்யப்பட்டுள்ளது.

வார்னர்

வார்னர்

பேட்டிங்கில் டேவிட் வார்னர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 193 ரன்களை அடித்துள்ளார். எனினும் அவர் நீக்கப்பட்டுள்ளார். அதே போல சுசித் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக அஃப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, புவேனேஷ்வர் குமார், மற்றும் அப்துல் சமாத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், மணிஷ் பாண்டே, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், அப்துல் சமாத், முகமது நபி, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, கலீல் அகமது

ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இதற்காக அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. உனத்கட்டிற்கு பதிலாக கார்திக் தியாகியும், அனுஜ் ராவத்திற்கு பதிலாக ஷிவம் தூபே சேர்க்கப்பட்டுள்ளனர்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

ஜாஸ் பட்லர், யாஷாஸ்வி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன், அனுஜ் ராவத், டேவிட் மில்லர், ராகுல் தேவட்டியா, கிறிஸ் மோரிஸ், கார்திக் தியாகி, சேட்டன் சகாரியா, முஸ்திவிஸுர் ரஹ்மான்.

Story first published: Sunday, May 2, 2021, 16:02 [IST]
Other articles published on May 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+