Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2021: தமிழ் இசையில் இந்தி பாட்டு.. சிஎஸ்கே - மும்பை போட்டிக்கான டீசர்.. இணையத்தில் படு வைரல்!

மும்பை: ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்காக பிசிசிஐ வெளியிட்டுள்ள டீசர் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

தடைபட்டுள்ள 14வது ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19ம் தேதி கோலகலமாக தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி அக்டோபர் 15ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் உள்ள 31 போட்டிகள் 27 நாட்களில் நடத்தி முடிக்கப்படவுள்ளது. செப்டம்பர் 19ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் முதாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த இரு அணிகள் மோதும் ஆட்டம் மட்டும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை போன்று அதிக எதிர்பார்ப்புடன் இருக்கும் என்பதால் ஐசிசி இந்த முடிவினை எடுத்துள்ளது.

முன்னேற்பாடுகள்

முன்னேற்பாடுகள்

இதற்காக பயிற்சிகளை மேற்கொள்ள சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் என 2 அணியுமே தங்களது வீரர்களை பயோ பபுள் பாதுகாப்புடன் அமீரகம் அனுப்பியுள்ளன. சிஎஸ்கே துபாயில் உள்ள ஓட்டலிலும், மும்பை இந்தியன்ஸ் அணி அபுதாபியில் உள்ள ஓட்டலிலும் தங்கியுள்ளனர். அங்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டீசர் வீடியோ

இந்த போட்டி தொடங்க இன்னும் ஒரு வார காலமே இருப்பதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். இந்நிலையில் அவர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிக்காக டீசர் வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்தி மொழியில் தமிழின் குத்துப்பாட்டை போன்று அமைந்திருக்கும் அந்த வீடியோ இணையத்தை கலக்கிவ் வருகிறது. மேலும் அந்த வீடியோவில் ஒருபுறம் மும்பை கலாச்சாரத்தையும், தமிழக கலாச்சாரத்தையும் ஒப்பிட்டு காட்டப்பட்டுள்ளது.

பழிவாங்கும் நோக்கம்

பழிவாங்கும் நோக்கம்

சென்னை - மும்பை இரு அணிகளுமே ஐபிஎல் தொடரில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளாக பார்க்கப்படுகின்றன. சிஎஸ்கே அணி இதுவரை 3 முறையும், மும்பை அணி 5 முறையும் கோப்பையை வென்றுள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளை பொறுத்தவரை மும்பை சற்று பலம் கூடுதலாக உள்ளது. இந்த தொடரின் முதலாவது பாதியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் மும்பை அணியிடம் சிஎஸ்கே தோல்வியை தழுவியிருந்தது. எனவே திருப்பிக் கொடுக்க வேண்டும் என சென்னை அணி போராடும் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Story first published: Saturday, September 11, 2021, 20:22 [IST]
Other articles published on Sep 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+