Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொல்கத்தா அணியின் முக்கிய பிரச்னை.. மாத்திக்கிற மாதிரியே தெரியல.. கவாஸ்கர் கொடுத்த சூப்பர் ஐடியா!

சென்னை: கொல்கத்தா அணியின் ஓப்பனிங் ஜோடியை சிறப்பாக அமைக்க முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் டிப்ஸ் கொடுத்துள்ளார்.

தொடர் தோல்விகளை பெற்றும் வந்த கொல்கத்தா அணி நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான தனது 2வது வெற்றியை பதிவு செய்தது.

கொல்கத்தாவின் தொடர் தோல்விகளுக்கு அந்த அணியின் ஓப்பனிங் சரியாக செயல்படாததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நேற்று நடைபெற்ற போட்டியிலும் இந்த ஓப்பனிங் சொதப்பியது.

ஓப்பனிங் ஜோடி

ஓப்பனிங் ஜோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கும் சுப்மன் கில், நிதிஷ் ராணா ஜோடி சிறப்பான தொடக்க தராமல் வெளியேறுவதால் பின்னால் வரும் வீரர்களுக்கு கடும் பிரஷர் விழுகிறது. இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் நிதிஷ் ராணா முதல் போட்டியில் மட்டும் சிறப்பாக ஆடினார். ஆனால், சுப்மன் கில் இதுவரை ஒரு போட்டியில் கூட தனது திறமையை நிரூபிக்கவில்லை.

சுப்மன் கில்

சுப்மன் கில்

22 வயதாகும் சுப்மன் கில் இதுவரை ஆடிய 6 போட்டிகளில் வெறும் 89 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக ஒரே ஒரு போட்டியில் 33 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரும் பந்துகளை திண்றுவிட்டு, பவர் ப்ளேவிலேயே அவுட்டாகி விடுவதால் அடுத்து வரும் வீரர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அடுத்து வரும் போட்டிகளில் ஓப்பனிங் ஜோடியை முற்றிலும் மாற்ற வேண்டும் என முன்னாள் வீரர் கவாஸ்கர் ஐடியா கொடுத்துள்ளார்.

ஐடியா

ஐடியா

இதுகுறித்து பேசிய அவர், நிதிஷ் ராணா இந்தாண்டு ஓப்பனிங்கில் அதிரடி காட்டவில்லை. கடந்தாண்டு கடந்த ஆண்டு 3வது வீரராக களமிறங்கி அதிரடி காட்டியிருந்தார். எனவே இவருக்கு 3வது இடம்தான் சரியாக இருக்கும். ராணாவுக்கு பதிலாக ஓப்பனிங்கில் ராகுல் திரிபாதியை களமிறக்க வேண்டும். இந்தாண்டு திரிபாதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

நரேன்

நரேன்

சுப்மன் கில் - ராகுல் திரிபாதி ஜோடியை ஓப்பனிங்கில் களமிறக்கலாம். சுப்மன் கில், முதல் சில போட்டிகளில் சரிவர ஆடவில்லை தான். எனினும் இவர் ஒருமுறை அதிரடி காட்டினால், அடுத்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அல்லது கடந்தாண்டு வரை ஓப்பனிங்கில் களமிறங்கி அதிரடி காட்டிய சுனில் நரேனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். ஒன்று சுபன் கில் - நரேன் ஜோடி அல்லது திரிபாதி - நரேன் ஜோடிக்கு கொல்கத்தா அணி ஓப்பனிங்கில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, April 27, 2021, 20:47 [IST]
Other articles published on Apr 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+