Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீம் கோச்-ஐ வெளிய அனுப்புங்க.. வார்னருக்காக களம் இறங்கிய கவாஸ்கர்..ஐதாராப் அணியில் கிளம்பிய பூகம்பம்

மும்பை: சன்ரைசர் ஐதராபாத் அணி டேவிட் வார்னரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிய விவகாரத்தில் தற்போது சுனில் கவாஸ்கர் புதிய பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் தொடர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. மொத்தம் 7 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது.

இதனால் அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.

மோசமான ஆண்டு

மோசமான ஆண்டு

கடந்த 2020ம் ஆண்டு வரை சிறப்பாக ஆடி வந்த ஐதராபாத் அணி, இந்த சீசனில் பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் சொதப்பியது. குறிப்பாக பேட்டிங்கில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க திணறினர். டெஸ்ட் போட்டி போன்று ஆடியதே முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. அதே போல பந்துவீச்சிலும் எந்த வீரரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. டி.நடராஜனும் காயம் காரணமாக வெளியேறியது பின்னடைவானது.

அணிக்குள் குழப்பம்

அணிக்குள் குழப்பம்

வீரர்கள் தேர்வில் அணி நிர்வாகத்திற்கும் கேப்டன் டேவிட் வார்னருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டார். மேலும் ப்ளேயிங் 11ல் இருந்தும் நீக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. புதிய கேப்டனாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டார். எனினும் வில்லியம்சன் கேப்டனாக செயல்பட்ட ஒரு போட்டியிலும் அந்த அணி படுதோல்வியடைந்தது.

கவாஸ்கர் கருத்து

கவாஸ்கர் கருத்து

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள கவாஸ்கர், வார்னரை கேப்டன் பதவியிலிருந்து மட்டுமல்லாமல் ப்ளேயிங் 11ல் இருந்தும் நீக்கியது குறித்து அந்த அணி கண்டிப்பாக விரைவில் யோசிக்கும். வார்னர் பொறுமையாக ரன்களை சேர்த்தார் தான். ஆனால் சக வீரர்களின் உதவியுடன் பார்த்தால் அந்த ரன்கள் மிகவும் முக்கியமானவை. அவர் ப்ளேயிங் 11ல் இருந்து வெளியேற்றப்பட்டது சற்று அதிர்ச்சியாக இருந்தது. கேப்டன்சி பொறுப்பு இல்லை என்றால் அவர் நிச்சயம் அதிரடியாக ஆடியிருப்பார்.

சரமாரி கேள்வி

சரமாரி கேள்வி

ஒரு அணி சரியாக ஆடவில்லை என்றால் பாதியிலேயே கேப்டன் மாற்றப்படுகிறார். ஆனால் ஏன் பயிற்சியாளர்கள் மாற்றப்படுவதில்லை. அவர்களின் அணியின் சொதப்பலுக்கு காரணம் தானே. கால்பந்து போட்டிகளில் ஒரு அணி சரியாக ஆடவில்லை என்றால் அந்த அணியின் மேலாளர் தான் வெளியேற்றப்படுவார். ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் ஏன் அதை செய்யக்கூடாது? எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.

காரணம்

காரணம்

கவாஸ்கரின் இந்த கேள்விக்கு பின்னால் ஒரு மறைமுக காரணமும் உண்டு. அணி தேர்வின் போது பயிற்சியாளர் ட்ரேவர் பேய்லிஸ் மற்றும் அணி இயக்குநர் டாம் மூடி ஆகியோருடன் வார்னருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை மணிஷ் பாண்டே அணியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் மறைமுகமாக வார்னர் கூறியிருந்தார். இதனால் தான் வார்னர் நீக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.

Story first published: Thursday, May 13, 2021, 16:42 [IST]
Other articles published on May 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+