Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் அங்கு இருப்பதே வேஸ்ட்.. எந்த பலனும் இல்லை..கொல்கத்தா அணியால் கடுப்பான கவாஸ்கர்.. கடும் சாடல்!

அகமதாபாத்: கொல்கத்தா அணியில் பேட்டிங் பிளான் குறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.

இந்த போட்டியில் மீண்டும் ஒருமுறை கொல்கத்தா அணியின் டாப் ஆர்டர் சொதப்பியது. இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

டாப் ஆர்டர் சொதப்பல்

டாப் ஆர்டர் சொதப்பல்

கொல்கத்தா அணிக்கு இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சரியான தொடக்கம் அமையவில்லை. அந்த அணி மீண்டும் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் 7 போட்டிகள் ஆகியும் இன்னும் மீளவில்லை. இதனால் இரண்டே வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்த சொதப்பலுக்கு அந்த அணியின் டாப் ஆர்டர் சரியாக விளையாடாததே காரணமாக பார்க்கப்படுகிறது.

மீண்டும் தோல்வி

மீண்டும் தோல்வி

நேற்றைய போட்டியிலும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்காமல் சொதப்பினர். ஆண்ட்ரே ரஸல் மட்டும் கடைசி நேரத்தில் அதிரடி காட்டி ஆடியதால் மட்டுமே அந்த அணியால் 20 ஓவர்களில் 154 ரன்கள் எடுக்க முடிந்தது. அதிரடியாக ஆடிய அவர் அதிகபட்சமாக 27 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார்.

கிளாஸ் பேட்ஸ்மேன் இல்லை

கிளாஸ் பேட்ஸ்மேன் இல்லை

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், கொல்கத்தா அணியில் எத்தனை பேர் வெளியில் உட்கார்ந்துள்ளனர் என்று எனக்கு தெரியாது. ஆனால் உண்மையை கூற வேண்டும் என்றால் கொல்கத்தா அணியில் மோர்கன், சுப்மன் கில்லை தவிர வேறு எந்த கிளாஸ் பேட்ஸ்மேனும் இல்லை.

நரேன் ஆடுவது வேஸ்ட்

நரேன் ஆடுவது வேஸ்ட்

ஆண்ட்ரே ரஸல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 5 - 6வது இடங்களில் களமிறங்குகின்றனர். நானாக இருந்தால் தினேஷ் கார்த்திக்கை டாப் ஆர்டருக்கு கொண்டு செல்வேன். ஏனெனில் சுனில் நரேன் 4வது இடத்தில் இருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அவர் 4வது வீரராக களமிறங்குவது அந்த சுத்த வேஸ்ட். அவர்கள் நரேனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றால் ஓப்பனிங்கிற்கு கொண்டு செல்லுங்கள். அப்போதாவது அவர் சில அதிரடிகளை காட்டுவார்.

அணியின் பிரச்னை

அணியின் பிரச்னை

கொல்கத்தா அணியில் 3, 4,5வது இடங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்கள் இல்லாததே பெரிய பிரச்னையாக உள்ளது. ஒரு வேளை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்களை அவர்கள் யோசித்து வைத்திருந்தால் அடுத்த சீசனில் அவர்களை வாங்க வேண்டும். ஏனென்றால் இந்த சீசனில் அப்படி யாரும் அந்த அணியில் இல்லை.

Story first published: Friday, April 30, 2021, 17:35 [IST]
Other articles published on Apr 30, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+