Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த வார்த்தைய சொல்லிட்டாரே.. கவாஸ்கரின் மனதை தொட்ட டிவில்லியர்ஸ்.. ஒரு வீரருக்கு இவ்வளவு புகழ்சியா!

அகமதாபாத்: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ஒன் மேன் ஷோ காட்டிய டிவில்லியர்ஸுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

பேட்டிங்கில் தடுமாறி வந்த ஆர்சிபி அணிக்கு டிவில்லியர்ஸ் காட்டிய அதிரடி நல்ல ஸ்கோரை பெற்றுக்கொடுத்தது.

டிவில்லியர்ஸ் அதிரடி

டிவில்லியர்ஸ் அதிரடி

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 171/5 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 170 ரன்கள் வரை அடித்து ஒரு ரன்னில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கோலி, பட்டிக்கல், மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற அதிரடி மன்னன் ஏ.பி.டிவில்லியர்ஸ் பொறுப்புடன் ஆடி அசத்தினார்.

புகழ்ச்சி

புகழ்ச்சி

முதலில் நிதானமாக ஆடி வந்த டிவில்லியர்ஸ் கடைசி சில ஓவர்களில் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 75 ரன்கள் விளாச டெல்லி அணிக்கு கடும் பிரஷர் விழுந்தது. இதனால் பெங்களூரு அணி த்ரில் வெற்றி பெற்றது. மீண்டும் ஒருமுறை மிஸ்டர் 360-ன் ஆட்டத்தை பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் கவாஸ்கர், டிவில்லியர்ஸின் அதிரடி ஆட்டம் அனைவரையும் வாய்ப்பிழக்க செய்யும். அவரின் ஆட்டத்தை காண்பதற்கென உலகில் எங்கு வேண்டுமானலும் பயணிக்கலாம். ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் டிவில்லியர்ஸின் ஆட்ட முறை மற்றும் ஷாட்கள் அவ்வளவு மகிழ்ச்சியை தரும்.

பரிந்துரை

பரிந்துரை

ஆர்சிபி அணி ஏன் டிவில்லியர்ஸை ஓப்பனிங் வீரராக களமிறக்க கூடாது. ஏனென்றால் 10வது ஓவருக்கு மேல்தான் அவரது அதிரடியை காண முடிகிறது. அவரை ஓப்பனிங்கிற்கு களமிறக்கினால் ஆட்டத்தின் 20 ஓவர்களிலும் ஏபிடிவில்லியர்ஸுன் ஆட்டத்தை நம்மால் காண முடியும் என தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, April 28, 2021, 20:27 [IST]
Other articles published on Apr 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+