Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருமே எதிர்பார்க்காத அந்த விஷயம்.. சொல்லி அடித்த தோனி.. பட்லர் விக்கெட்டின் சுவாரஸ்ய பின்னணி!

மும்பை: கேப்டன் தோனி பிட்ச் மற்றும் ஆட்டத்தை கணிப்பதில் மீண்டும் கில்லாடி என முன்னாள் வீரர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் சிறப்பான தொடக்கம் அமைத்து வலுவான நிலையில் இருந்த ராஜஸ்தான் அணி 3 ஓவர்களில் 5 விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து போட்டியை நழுவவிட்டது.

வலுவான நிலை

வலுவான நிலை

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஜாஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 11 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 87 ரன்களுடன் பலமாக இருந்தது.

தோனியின் சிறப்பு

தோனியின் சிறப்பு

இதனால் அந்த அணி சுலபமாக வென்று விடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஆல்ரவுண்டர் ஜடேஜா, பட்லரின் விக்கெட்டை எடுத்து பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார். ஆட்டத்தின் 10வது ஓவரில் ஜடேஜா வீசிய பந்தை பட்லர் சிக்ஸர் பறக்கவிட்டார். ஆனால் அதற்கு அடுத்து அவர் வீசிய 12வது ஓவரில் தோனி ஸ்டம்ப்பிற்கு பின் இருந்து இந்தியில், இனி பந்து டேர்ன் ஆகும் எனக்கூறினார். அதே போல அவர் வீசிய முதல் பந்திலேயே ஜாஸ் பட்லர் மற்றும் சிவம் தூபே என 2 முக்கிய விக்கெட்கள் வீழ்ந்தது.

 கவாஸ்கர் புகழாரம்

கவாஸ்கர் புகழாரம்

இந்நிலையில் இதுகுறித்து பேசிய கவாஸ்கர், தோனியின் பவுலிங் மாற்றம் அற்புதமாக இருந்தது. பட்லரின் ஒரு சிக்ஸருக்கு பிறகு சரியாக பிட்ச்சை கணித்து அடுத்த ஓவரில் டேர்ன் ஆகும் என கூறினார். அதே போல பிட்ச் ஸ்பின்னருக்கு சாதகமானது. அதற்கு அடுத்ததாக மொயின் அலிக்கு ஓவர்கள் கொடுத்து அற்புதமான கேப்டன்சியை செய்தார். ஆட்டத்தையும் பிட்ச்-ஐயும் கணிப்பதில் அவர் கில்லாடி எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்க்காத விஷயம்

எதிர்பார்க்காத விஷயம்

இதே போல இதுகுறித்து பேசியுள்ள நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ், மும்பை பிட்ச்-ல் ஆட்டத்தின் 2வது இன்னிங்ஸில் பந்து டேர்ன் ஆகும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் தோனி சரியாக அதனை கணித்து அசத்தினார். சென்னை அணியின் கேப்டனாக 200வது போட்டியில் அவர் அற்புதமான வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, April 20, 2021, 13:22 [IST]
Other articles published on Apr 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+