Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs DC: “பாசத்துக்கெல்லாம் இடமில்லை” சீனியர் வீரரை நீக்கிய தோனி.. சிஎஸ்கேவின் அதிரடி மாற்றங்கள்!

துபாய்: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் இன்று பிளே ஆப் சுற்றுக்கு தேர்வான டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் துபாயில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.

அந்தவகையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முக்கிய ஆட்டம்

முக்கிய ஆட்டம்

ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் இந்த அணிகள் மோதும் போட்டி என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இரு அணிகளும் 12 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டியில் யார் பெறுகிறார்களோ ? அவர்கள் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் செல்ல வாய்ப்பு உள்ளது.

மீண்டும் வந்த 2 பவுலர்கள்

மீண்டும் வந்த 2 பவுலர்கள்

இப்படிபட்ட முக்கியமான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. கடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பிராவோ மற்றும் தீபக் சஹார் இல்லாதது தான் சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. எனவே இந்த போட்டியில் சாம் கரணுக்கு பதிலாக டுவைன் பிராவோ மற்றும் ஆஷிஃப்-க்கு பதிலாக தீபக் சஹாரும் மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

சீனியர் வீரர் நீக்கம்

சீனியர் வீரர் நீக்கம்

இந்த அணியில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த சில போட்டிகளில் பெரியளவில் ரன் குவிக்காத சீனியர் வீரர் சுரேஷ் ரெய்னா ப்ளேயிங் 11ல் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு சீனியர் வீரரான ராபின் உத்தப்பா அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த உத்தப்பா சிஎஸ்கேவுக்காக இன்று முதல் போட்டியில் களமிறங்குகிறார். நிச்சயம் அவரின் அதிரடி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே ப்ளேயிங் 11

சிஎஸ்கே ப்ளேயிங் 11

ருதுராஜ் கெயிக்வாட், டூப்ளசிஸ், மொயின் அலி, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், ஹாசல்வுட்

டெல்லி அணி மாற்றம்

டெல்லி அணி மாற்றம்

இதே போல டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு டெல்லி அணிக்காக ஓரளவிற்கு சிறப்பாக ஆடி வந்த ஸ்டீவன் ஸ்மித் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் ரிபல் படேல் என்ற இளம் வீரர் அறிமுகமாகிறார். மற்றபடி டெல்லி அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

டெல்லி ப்ளேயிங் 11

டெல்லி ப்ளேயிங் 11

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ரிபல் படேல், சிம்ரான் ஹெட்மெயர், அக்‌ஷர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரபாடா, ஆவேஷ் கான், ஆன்ரிச் நார்ட்ஜே

பழித்தீர்க்குமா சிஎஸ்கே?

பழித்தீர்க்குமா சிஎஸ்கே?

இதற்கு முன்னர் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது. அனல் பறந்த அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய டெல்லி அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. எனவே 2வது போட்டியில் திருப்பிக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, October 4, 2021, 20:53 [IST]
Other articles published on Oct 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+