Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவர்தான் ரொம்ப பாவம்.. ஐபிஎல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் கடும் விரக்தியில் சிஎஸ்கே வீரர்.. சோக கதை!

சென்னை: 2021 ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் முக்கியமான சிஎஸ்கே வீரர் ஒருவர் விரக்திக்கு உள்ளாகி உள்ளார்.

இந்தியாவில் கொரோனா கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையில் ஐபிஎல் தொடரும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கடந்த 4 நாட்களாக அடுத்தடுத்து பல வீரர்களுக்கு கொரோனா ஏற்பட்டது.

இதையடுத்து தற்போது தேதி குறிப்பிடப்படாமல் ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. குறைந்தது அடுத்த 2 மாதங்களுக்கு ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் வருகின்றன.

ஆனால்

ஆனால்

இந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் முக்கியமான சிஎஸ்கே வீரர் ஒருவர் விரக்திக்கு உள்ளாகி உள்ளார். 2021 ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் தனிப்பட்ட காரணங்களால் சிஎஸ்கே வீரர் ஹஸல்வுட் பாதியில் வெளியேறினார். இவர் வெளியேறியதை அடுத்து மாற்று வீரரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

மாற்று வீரர்

மாற்று வீரர்

இதையடுத்து ஹஸல்வுட்டிற்கு மாற்று வீரராக ஆஸ்திரேலியாவின் ஜேசன் பெஹன்டிராப் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆஸ்திரேலியாவில் லோக்கல் தொடர்களை பாதியில் புறக்கணித்துவிட்டு அவசர அவசரமாக இந்தியா வந்தார். இந்தியா வந்து 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.

10 நாட்கள்

10 நாட்கள்

தொடர் தொடங்கி 10 நாட்கள் கழித்துதான் அவர் சிஎஸ்கேவில் இணைந்தார். பின் பயிற்சியை தொடங்கிய பெஹன்டிராப்பிற்கு ஆடும் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 2 போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கப்படாமல் ஓரம்கட்டப்பட்டார். இப்படிப்பட்ட நிலையில் பெஹன்டிராப் ஐபிஎல்லில் ஆடும் முன்பே மொத்தமாக தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வேஸ்ட்

வேஸ்ட்

கஷ்டப்பட்டு சிஎஸ்கேவில் ஆட வேண்டும் என்று ஆசைப்பட்டு இந்தியா வந்த பெஹன்டிராப் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறார். தேவையின்றி ஒரு வாரம் தனிமைப்படுத்துதல், ஒரு வாரம் பயிற்சி என்று கஷ்டப்பட்டு கடைசியில் இவர் வாய்ப்பே கிடைக்காமல் திரும்பி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

பரிதாபம்

பரிதாபம்

அதிலும் இவர் ஆஸ்திரேலியா திரும்பி செல்வதும் சிக்கலாகி உள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையே விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு தேவையின்றி வந்த பெஹன்டிராப் மீண்டும் எப்படி ஆஸ்திரேலியா செல்வார் என்று கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Tuesday, May 4, 2021, 18:22 [IST]
Other articles published on May 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+