Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாராலும் முடியவில்லை.. அவங்க மட்டும் எப்படி ஆடுனாங்க? சிஎஸ்கேவை பார்த்து மலைத்து போன ஆர்சிபி, எம்ஐ!

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் ஆடி வரும் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் போன்ற அணிகள் கடுமையாக திணறி வருகின்றன.

கொரோனா காலம் என்பதால் 2021 ஐபிஎல் தொடர் குறைவான மைதானங்களில் மட்டுமே மாறி மாறி நடைபெறுகிறது. முதல் கட்ட லீக் போட்டிகள் எல்லாம் மும்பை மற்றும் சென்னை மைதானங்களில் மட்டுமே நடைபெறுகிறது.

வரும் நாட்களில் மீதம் உள்ள போட்டிகள் அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட சில மைதானங்களில் நடக்க உள்ளன. இதில் சென்னை மைதானம் விளையாடுவதற்கு மிகவும் சிரமமான ஒன்றாக மாறியுள்ளது.

சென்னை

சென்னை

சென்னை பிட்ச் களிமண் கலந்து கருப்பு நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் புற்களும் இருப்பதால் பிட்ச் பெரிய அளவில் பேட்டிங் செய்ய சாதகமாக இல்லை. பவுலிங் பிட்ச் போலவே இந்த பிட்ச் காணப்படுகிறது. சிஎஸ்கே பொதுவாக இது போன்ற பிட்ச்களை விரும்பும்.

பிட்ச்

பிட்ச்

இந்த பிட்சில் என்ன சிக்கல் என்றால் புதிதாக இறங்கும் பேட்ஸ்மேன் எளிதாக அடித்து ஆட முடியாது. முதல் பந்தில் இருந்தே பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடும் சூழ்நிலை இந்த பிட்சில் இல்லை. புதிதாக ஒரு பேட்ஸ்மேன் களமிறங்கினால், அவர் 10 பந்துகள் வரை பிடித்தால்தான் பிட்ச் எப்படி இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும்.

சிக்கல்

சிக்கல்

கொல்கத்தா அணி மும்பையிடம் தோல்வி அடைய இதுதான் காரணம். தினேஷ் கார்த்திக், ரசல் சொதப்பவும் இதுவே காரணம். நேற்று போட்டியிலும் இப்படித்தான் நடந்தது. நேற்றும் கூட ஹைதராபாத் அணியில் விஜய் சங்கர், சமத், ரஷீத் போன்றவர்கள் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட முடியாமல் திணறினார்கள். இதுதான் கடைசி கட்டத்தில் ஆட்டத்தின் முடிவு மாற காரணம்.

காரணம்

காரணம்

இன்னொரு பக்கம் இந்த பிட்ச் முழுக்க முழுக்க ஸ்பின் பிட்சாக இருக்கிறது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எல்லாம் சுத்தமாக ஆடவே முடியாத அளவிற்கு ஸ்விங் ஆகிறது. இங்கு கடைசி டெத் ஓவர்களில் பேட்டிங் செய்வது எல்லாம் மிக கஷ்டம். டெத் ஓவர்களில் பேட்டிங் செய்ய சேப்பாக்கத்தில் ஆடி வரும் மும்பை, கொல்கத்தா, ஹைதரபாத், பெங்களூர் போன்ற அணிகள் கடுமையாக திணறி வருகின்றன.

ஆனால்

ஆனால்

ஆனால் இதே பிட்சில் இதற்கு முந்தைய வருடங்களில் சிஎஸ்கே சிறப்பாக ஆடி இருக்கிறது. முக்கியமாக டெத் ஓவர்களில் சிஎஸ்கே இது போன்ற பிட்சுகளில் அதிரடியாக ஆடி உள்ளது. மற்ற அணிகள் இந்த பிட்சில் ஆட திணறும் போது, இதே பிட்சில்தான் சிஎஸ்கே கடைசி ஓவர்களில் போட்டியை முடித்து உள்ளது.

முக்கியம்

முக்கியம்

முக்கியமாக இங்கு ஸ்பின் பவுலர்களை சிஎஸ்கே மற்ற அணிகளை விட நன்றாகவே எதிர்கொண்டுள்ளது. சிஎஸ்கே இத்தனை வருடம் இந்த பிட்சில் எப்படி ஆடியது என்று மற்ற அணிகள் திகைக்கும் அளவிற்கு பிட்ச் உள்ளது. தற்போது ஹோம் பிட்ச் மாற்றம் காரணமாக எந்த அணி எப்படி ஆடும், எந்த அணி வெற்றிபெறும் என்பதெல்லாம் கணிக்க முடியாத அளவிற்கு மாறியுள்ளது.

Story first published: Thursday, April 15, 2021, 15:28 [IST]
Other articles published on Apr 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+