Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நான் ஆடிய.. அந்த 6 பாலால் மேட்சே தோத்து இருப்போம்.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட தோனி.. பரபரப்பு

சென்னை: நேற்று ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது பேட்டிங் சரியில்லாதது குறித்து கேப்டன் தோனி சுயவிமர்சனம் செய்துள்ளார்.

Recommended Video

Dhoni சுய விமர்சனம்.. 'அந்த 6 Ball, Match-ல தோத்து இருப்போம்..' | Oneindia Tamil

ராஜஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் ஆடி சிஎஸ்கே 2 போட்டிகளில் வென்றுள்ளது.

ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே 20 ஓவரில் 9 விக்கெட்டிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

தோனி

தோனி

நேற்று போட்டியில் வெற்றிக்கு பின் பேசிய கேப்டன் தோனி, நான் எப்போதும் ஆடும் போதும் அந்த நேரத்திற்கு எது தேவை என்று பார்த்து ஆடுவேன். சாம் கரன் சிறப்பாக பவுலிங் செய்தார் என்று நம்புகிறேன். தீபக் சாகர் கொஞ்சம் ஸ்லோ பந்துகளை அதிகமாக வீசினார். அணிக்கு நல்ல தொடக்கம் தேவை என்று நினைத்தேன்.

பிட்ச்

பிட்ச்

பிட்ச் நன்றாக ஸ்பின் ஆனது. பட்லர் ரிவர்ஸ் ஷாட் அடித்ததை பார்த்தது நான் கவலைப்படவில்லை. அணியில் 6 பவுலர்கள் இருப்பது ஒரு வித்தையில் நல்லது. இதுதான் எங்கள் அணிக்கு உதவுகிறது. தற்போது எப்போதும் இருப்பதை விட கொஞ்சம் குறைவாகவே பனி இருக்கிறது.

ஸ்பின்

ஸ்பின்

நாங்கள் இன்னும் கொஞ்சம் கூட அதிகமாக ஸ்கோர் எடுத்து இருக்கலாம். கடந்த ஒரு வருடத்தில் நிறைய மாறிவிட்டது. ஆனால் ஒரு அணியாக நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். சென்ற வருடம் பவுலர்களுக்கு இருந்த பிரஷர் இந்த முறை இல்லை.

அன்பிட்

அன்பிட்

நீங்கள் விளையாடும் போது உங்களை யாரும் அன்பிட் என்று சொல்லவிட கூடாது. நல்லவேளை நாங்கள் 160 ரன்கள் எடுத்தோம். நாங்கள் இன்னும் கூட அதிகமாக எடுத்து இருக்கலாம். நான் ஆடிய முதல் 6 பந்துகள் காரணமாக அணியே கூட தோல்வி அடைந்து இருக்கும். இனிமேல் கவனமாக ஆடி அதிக ரன்களை எடுக்க வேண்டும்.

ஆடுவேன்

ஆடுவேன்

நான் நன்றாக ஆட போகிறேன் என்றெல்லாம் உறுதி அளிக்க முடியாது. எனக்கு 24 வயது இருக்கும் போது நான் அப்படி உறுதி அளிக்கவில்லை. எனக்கு 40 வயது இருக்கும் போதும் என்னால் அப்படி உறுதி அளிக்க முடியாது, என்று தோனி குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, April 20, 2021, 9:48 [IST]
Other articles published on Apr 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+