Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவமானம்.. கிரிக்கெட்டுக்காக குடும்பத்தையே துறந்தார்.. ஆர்சிபியின் "ரட்சகன்" ஹர்ஷல்.. உருக்கமான கதை!

சென்னை: பெங்களூர் அணியின் புதிய ஹீரோவாக உருவெடுத்து இருக்கும் ஹர்ஷல் பட்டேலுக்கு பின் உருக்கமான கிரிக்கெட் வரலாறு இருக்கிறது.

Recommended Video

RCB-யின் 'ரட்சகன்' Harshal Patel.. உருக்கமான கதை! | Oneindia Tamil

பெங்களூர் அணிக்காக ஆடி வரும் ஹர்ஷல் பட்டேல், நேற்று மும்பைக்கு எதிராக ஆர்சிபியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட் எடுத்து, இவர் அசத்தினார்.

டெத் ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்யும் இவர் பெங்களூரின் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக உருவெடுத்துள்ளார். நேற்று மொத்தமாக 5 விக்கெட் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

சாதனை

சாதனை

பெங்களூர் அணியில் தற்போது கலக்கி வரும் ஹர்ஷல் பட்டேல் குஜராத்தை சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டவர். முதலில் குஜராத்தில் உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார். ஆனால் மாநில அணியில் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார். 2008-2009ல் குஜராத் லிஸ்ட் ஏ அணியில் ஆடினார்.

மாற்றம்

மாற்றம்

இந்த நிலையில் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்ட போது, இவரின் குடும்பமும் அமெரிக்காவிற்கு கிளம்பி சென்றது. மொத்தமாக அமெரிக்காவில் செட்டில் ஆக வேண்டும் என்று இவரின் குடும்பம் சென்றது. ஆனால் இவர் குடும்பத்தை விட கிரிக்கெட் கெரியர்தான் முக்கியம் என்று முடிவு செய்து இந்தியாவிலேயே தங்கி விட்டார்.

இந்தியா

இந்தியா

குடும்பத்தையே துறக்கும் அளவிற்கு தைரியமாக இருந்த இவர் தொடர்ந்து குஜராத் அணியால் புறக்கணிக்கப்பட்டு வந்தார். இதனால் ஒரேயடியாக குஜராத்தை காலி செய்துவிட்டு, ஹரியானாவில் குடியேறினார். ஹரியானாவிற்கு சென்ற சில மாதங்களில் 2011ல் ஹரியானா ரஞ்சி அணியில் தேர்வானார். அந்த தொடர்ந்து இரண்டு போட்டிகளில் 8,8 விக்கெட்டுகளை எடுத்தார்.

கர்நாடகா

கர்நாடகா

முக்கியமாக கர்நாடகா, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக நன்றாக ஆடினார். இதனால் 2012ல் பெங்களூர் அணியால் ஹர்ஷல் எடுக்கப்பட்டார். அந்த தொடரில் இவர் தனக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் நன்றாக ஆடினார். ஆனால் கோலி ஏனோ இவரை மாற்று வீரராகவே வைத்து இருந்தார். தொடர்ந்து இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 2018ல் டெல்லி அணிக்கு ஹர்ஷல் பட்டேல் சென்றார்.

இல்லை

இல்லை

அங்கும் இவர் கடுமையாக புறக்கணிக்கப்பட்டார். இவருக்கு தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தன்னை நிரூபித்தார். இந்த நிலையில் 2021 ஐபிஎல் ஏலத்திற்கு முன் இவர் மீண்டும் பெங்களூருக்கு டிரேட் செய்யப்பட்டார். தற்போது பெங்களூர் அணிக்காக முதல் போட்டியிலேயே 5 விக்கெட் எடுத்துள்ளார்.

மும்பை

மும்பை

முக்கியமாக மும்பைக்கு எதிராக 5 விக்கெட் எடுத்த ஒரே வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார். இதற்கு முன் இந்த சாதனையை யாருமே செய்தது இல்லை. பெங்களூர் அணியில் இனி இவர்தான் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்று கோலியே நேற்று பாராட்டி உள்ளார். பும்ராவே நேற்று திணறிய போது ஹர்ஷல் பட்டேல் நுணுக்கமாக திட்டமிட்டு பவுலிங் செய்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Story first published: Saturday, April 10, 2021, 8:51 [IST]
Other articles published on Apr 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+