3 வருட போராட்டம்.. யாருமே மதிக்கவில்லை.. ஒரே போட்டியில் தரமான பதிலடி தந்த இளம் வீரர்.. மாஸ் பின்னணி
டெல்லி: நேற்று பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணியின் வீரர் ஹர்பிரீத் பிரார் 3 விக்கெட் எடுத்து அசத்தினார்.
நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் தோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு பெங்களூர் வெறும் 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் ஸ்பின் பவுலர் ஹர்பிரீத் பிரார் முக்கிய காரணமாக இருந்தார்.

ஹர்பிரீத் பிரார்
இவர்தான் நேற்று பஞ்சாப் அணிக்காக போட்டியை மாற்றியது. பெங்களூர் அணியின் டாப்ஸ் ஆர்டர் வீரர்கள் கோலி, மேக்ஸ்வெல், ஏபிடி என்று 3 ஜாம்பவான்களின் விக்கெட்டை அடுத்தடுத்து இவர்தான் எடுத்தது. 4 ஓவர்கள் வீசிய ஹர்பிரீத் பிரார் வெறும் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து பஞ்சாப் வெற்றிக்கு வித்திட்டார்.

யார் இவர்?
லெக் ஸ்பின் பவுலரான ஹர்பிரீத் பிரார் இரண்டு சீசன்களில் பஞ்சாப் அணிக்காக சில போட்டிகளில் ஆடி உள்ளார். ஆனால் விக்கெட் எடுக்கவில்லை, அதேபோல் அதிக ரன்களை கொடுத்தார். இதன் காரணமாக இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

மும்பை
அதேபோல் மும்பை அணியால் இரண்டு முறை டிரையல் பார்க்கப்பட்ட இவர், சரியாக பவுலிங் செய்யவில்லை என்று ஓரம் கட்டப்பட்டார். முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும் தொடர்ந்து 3 வருடமாக இவருக்கு பெரிதாக தொடர் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

வாய்ப்பு இல்லை
அதிலும் ஹர்பிரீத் பிரார் கடந்த இரண்டு சீசன்களாக சையது முஷ்டாக் தொடரில் பஞ்சாப் அணிக்கு அதிக விக்கெட் எடுத்த வீரராக இருந்தார். முதல் தர போட்டிகளில் பஞ்சாப் அணிக்கு அதிகமாக விக்கெட் எடுத்தது இவர்தான். ஆனால் இவரை பெரிதாக ஐபிஎல்லில் யாரும் மதிக்கவில்லை.

சிறப்பு
இந்த நிலையில் நேற்று ஒரே போட்டியில் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு ஹர்பிரீத் பிரார் அசத்தி உள்ளார். ஒரே போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்து ஹர்பிரீத் பிரார் 3 விக்கெட்டுகளை, அதிலும் பெங்களூரின் மூன்று ஜாம்பவான்கள் விக்கெட்டை ஹர்பிரீத் பிரார் எடுத்துள்ளார். ஐபிஎல் 2021 தொடரின் புதிய சூப்பர் ஸ்டார் என்று ஹர்பிரீத் பிரார் பலரும் புகழ தொடங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications