Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘சோற்றில் மறைக்கப்பட்ட முழு பூசணிக்காய்’.. நடராஜன் விலகலில் எழுந்த சர்ச்சை.. உண்மை காரணம் என்ன?

சென்னை: நடராஜன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதற்கான உண்மை பின்னணி வெளியாகியுள்ளது.

Recommended Video

IPL 2021: Natarajan விலகல்! SRH அதிர்ச்சி | OneIndia Tamil

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் முதல் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடிய தமிழக நடராஜன், அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு பெறாமல் இருந்தது ரசிகர்களுக்கு பல கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில் டி.நடராஜன் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக விலகுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

நடராஜன் விலகல்

நடராஜன் விலகல்

ஐபிஎல்-ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வந்த நடராஜன் முழங்கால் காயம் காரணமாக கடந்த 2 போட்டிகளில் விளையாடமல் இருந்தார். அவருக்கு பதிலாக கலீல் அஹமது அணியில் சேர்க்கப்பட்டார். நடராஜன் அணிக்கு எப்போது திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் முழுவதும் விளையாடமாட்டார் என அறிவிப்பு வெளியானது.

என்ன காரணம்

என்ன காரணம்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அவருக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. இதனால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் நடராஜன் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார். எனினும் நடராஜனின் உடல்நிலை சீராக உள்ளதாக கூறி கிரிக்கெட் அகடாமி மருத்துவர்கள் அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட அனுமதி வழங்கினர்.

உண்மை பின்னணி

உண்மை பின்னணி

ஆனால் தற்போது அவர்கள் வழங்கிய அறிக்கையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நடராஜன் முழுவதுமாக குணமடைந்துவிட்டார், முழு உடற்தகுதியுடன் உள்ளார் என கூறப்பட்ட நிலையில், மீண்டும் அவர் அதே காயத்தால் அவதியுற்றுள்ளார். இதனால் பெங்களூரு அகாடமியில் நடராஜன் முழுமையாக குணமடையவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் இந்த தொடரில் இருந்தே வெளியேறும் அளவிற்கு காயம் அவருக்கு இருந்துள்ளது. இந்த தகவலை பிசிசிஐ வட்டாரங்களே உறுதி செய்ததாக கூறப்படுகிறது.

ஐதராபாத் அணிக்கு சிக்கல்

ஐதராபாத் அணிக்கு சிக்கல்

ஐதராபாத் அணியின் முக்கிய பவுலராக நடராஜன் விலங்குகிறார். எனினும் அவருக்கு பதிலாக விளையாடும் வீரர் குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இன்னும் முடிவு செய்யவில்லை. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

Story first published: Friday, April 23, 2021, 12:25 [IST]
Other articles published on Apr 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+