Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவில் 3 பேருக்கு கொரோனா உறுதி... தற்போதைய நிலை என்ன.. ஐபிஎல்-ல் பரபரப்பு!

டெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இந்தியாவில் ஐபிஎல் தொடர் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எனினும் அணி வீரர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் என பலருக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வருவது போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா

கொரோனா

நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ள இந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பவுலிங் பயிற்சியாளர் லக்‌ஷுமிபதி பாலாஜி மற்றும் பஸ் க்ளீனர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

எப்படி உறுதியானது

எப்படி உறுதியானது

அணியை சேர்ந்த அனைவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. ஆனால் இவர்கள் மூவர் மட்டும் இன்று காலை தனியாக மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வீரர்களுக்கும் இன்று புதிதாக பரிசோதனை செய்தால் யாருக்கேனும் உறுதியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நெறிமுறைகள் என்ன?

நெறிமுறைகள் என்ன?

தற்போது நோய் தொற்று உறுதியான 3 பேருக்கும் மீண்டும் பரிசோதனை செய்யப்படவுள்ளது. அதிலும் அவர்களுக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்தால், அவர்கள் உடனடியாக அணியின் பபுளை விட்டு வெளியேற்றப்பட்டு 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன் பிறகு 2 முறை பரிசோதனை செய்து இரண்டிலுமே நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே மீண்டும் அணியின் பபுளில் சேர்க்கப்படுவார்கள்.

2 வீரர்களும் பாதிப்பு

2 வீரர்களும் பாதிப்பு

முன்னதாக இன்று காலை கொல்கத்தா அணியை சேர்ந்த வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அந்த அணியை சேர்ந்த மேலும் சில வீரர்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று நடைபெறவிருந்த கொல்கத்தா - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 3, 2021, 18:02 [IST]
Other articles published on May 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+