Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த தமிழக வீரரா? வேண்டவே வேண்டாம்.. "கூக்ளி புயலை" அடியோடு ஓரம்கட்டும் கும்ப்ளே.. ரொம்ப பாவம்!

சென்னை: ராஜஸ்தானுக்கு எதிராக இன்று ஆடும் பஞ்சாப் அணியில் முக்கியமான தமிழக வீரர் ஒருவர் ஓரம்கட்டப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.

ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான ஆட்டம் இன்று நடக்கிறது. பஞ்சாப் அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையில் இன்று மேட்ச் நடக்க உள்ளது.

இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம வலிமையுடன் இருப்பதால் இன்று நடக்கும் ஆட்டம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. கண்டிப்பாக இன்றைய போட்டி ஹை ஸ்கோர் மேட்சாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

இந்த நிலையில் ராஜஸ்தானுக்கு எதிராக இன்று ஆடும் பஞ்சாப் அணியில் முக்கியமான தமிழக வீரர் ஒருவர் ஓரம்கட்டப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதன்படி இன்று ஆடும் பஞ்சாப் அணியில் கே. எல் ராகுல், மயங்க் அகர்வால், டேவிட் மாலன், பிரசிம்ரான் சிங், நிக்கோலஸ் பூரான், ஷாருக்கான், தீபக் ஹூடா, ஜெய் ரிச்சரசன், ரைலி மெரிடித், சாமி, ரவி பிஷனோய் ஆகியோர் ஆட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

எப்படி

எப்படி

இதில் ரவி பிஷனோய் பஞ்சாப் அணியின் முக்கியமான ஸ்பின் பவுலராக இருப்பார் என்கிறார்கள். இன்னொரு பக்கம் வேறு ஸ்பின் பவுலர்கள் யாருக்கும் பஞ்சாப் அணி நிர்வாகம் வாய்ப்பு அளிக்காது என்கிறார்கள். தீபக் ஹூடாவும் கண்டிப்பாக பஞ்சாப் அணியில் இன்று இடம்பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

ஆனால் இன்று நடக்கும் போட்டியில் முருகன் அஸ்வின் களமிறங்க வாய்ப்பு இல்லை. பஞ்சாப் அணியின் கூக்ளி புயலான இவருக்கு இன்று வாய்ப்பு மறுக்கப்படலாம் என்கிறார்கள். இவர் தொடர்ந்து முதல்தர போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

பார்ம்

பார்ம்

கடந்த 2 வருடமாக இவர் நல்ல பார்மில் இருக்கிறார். ஆனாலும் கடந்த வருடம் கும்ப்ளே இவருக்கு பெரிதாக வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த வருடமும் கும்ப்ளே இதேபோல் இவரை ஓரம் கட்ட அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

ஏன்

ஏன்

ரவி மீதும், தீபக் ஹூடா மீது கும்ப்ளே அதிக நம்பிக்கை வைத்துள்ளார். இதனால் அவர்களுக்குதான் கும்ப்ளே வாய்ப்பு கொடுப்பார். முருகன் அஸ்வின் இன்றும் பென்ச் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Story first published: Monday, April 12, 2021, 13:17 [IST]
Other articles published on Apr 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+