எல்லோர் பார்வையும் இவர் மீதே.. ஐபிஎல்லில் இன்று அறிமுகமாகும் தமிழக "ஸ்டார்".. குறி வைக்கும் கோலி!
சென்னை: ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் அணியில் அறிமுகம் ஆக இருக்கும் தமிழக வீரர் ஒருவர் அதிக கவனம் ஈர்த்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இன்று பஞ்சாப் அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையில் போட்டி நடக்க உள்ளது. இரண்டு அணியிலும் வலுவான பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ளனர்.
அதேபோல் சிக்ஸ் அடித்து வாணவேடிக்கை காட்ட கூடிய வீரர்கள் பலர் உள்ளனர். இதனால் இன்றைய ஆட்டம் கண்டிப்பாக ஹை ஸ்கோரிங் ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி
இப்படிப்பட்ட நிலையில் இன்று பஞ்சாப் அணியில் ஆட இருக்கும் தமிழக வீரர் ஷாருக்கான் அதிக கவனம் பெற்றுள்ளார். பஞ்சாப் அணியால் இவர் 5.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்த நிலையில் பஞ்சாப் அணியில் இவர் பினிஷராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாய்ப்பு
சையது முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணியில் மிகவும் சிறப்பாக ஆடி கலக்கியவர் ஷாருக்கான். அந்த தொடர் முழுக்க தமிழக அணி பல போட்டிகளில் வெற்றிபெற இவர்தான் காரணமாக இருந்தார். கடைசி கட்டத்தில் வந்து சிக்ஸ், பவுண்டரி என்று அடித்து போட்டியை மாற்றும் திறன் கொண்டவர் ஷாருக்கான்.

ஷாருக்கான்
மேக்ஸ்வெல் போல ஆடும் ஸ்டைல் கொண்ட இவர், மேக்ஸ்வெல் போல அவுட் ஆகாமல் கடைசி வரை நின்று மேட்சை முடிக்கும் பினிஷராக தமிழக அணியில் வலம் வந்தார். இவரின் சிறப்பான ஆட்டத்தால் கவரப்பட்ட பஞ்சாப் அணி நிர்வாகம் இவரை 5.25 கோடி கொடுத்து எடுத்தது.

பெங்களூர்
பெங்களூர் அணியும் இவரை ஏலத்தில் எடுக்க தீவிரமாக முயன்றது. ஆனால் பஞ்சாப் அணி இவருக்கு எவ்வளவு கோடி வேண்டுமானாலும் கொடுக்க ரெடியாக இருந்தது. இதனால் இன்று கண்டிப்பாக ஷாருக்கானின் ஆட்டத்தை கோலி கவனிப்பார். ஷாருக்கான் எப்படி ஆடுகிறார் என்று கூர்ந்து கவனிப்பார்.

கவனிப்பார்
இந்திய அணியில் டி 20 உலகக் கோப்பைக்காக வீரர்களை தேர்வு செய்யும் திட்டத்தில் கோலி இருக்கிறார். இன்று ஷாருக்கான் ஆடும் விதத்தை பொறுத்து அவரின் எதிர்காலமே மாறும். இன்று மட்டும் ஷாருக்கான் நன்றாக ஆடினார் என்றால் மொத்தமாக அவரின் கிரிக்கெட் கெரியரே புதிய உச்சம் பெறும்.


Click it and Unblock the Notifications