For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போச்சு இனி எல்லாம் போச்சு.. 2 அணிகளுக்கு பெரும் இடி.. மேலும் 2 முக்கிய வீரர்கள் வெளியேற திட்டம்..!

சென்னை: ஐபிஎல்-ல் இருந்து நேற்று சில வீரர்கள் வெளியேறிய அதிர்ச்சியில் அணிகள் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது.

Recommended Video

IPL 2021 தொடரில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் வீரர்கள்.. CSK-வில் யாரெல்லாம் வெளியேற வாய்ப்பு ?

கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறி வருகின்றனர்.

ஆண்ட்ரு டை சொன்ன அந்த வார்த்தை.. கலங்கிய ஆஸி வீரர்கள்.. மொத்தமாக ஐபிஎல்லில் இருந்து வெளியேற முடிவா? ஆண்ட்ரு டை சொன்ன அந்த வார்த்தை.. கலங்கிய ஆஸி வீரர்கள்.. மொத்தமாக ஐபிஎல்லில் இருந்து வெளியேற முடிவா?

இதனால் ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமா? அல்லது பாதியில் நிறுத்தப்படுமா என்ற கேள்வி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

கொரோனா அச்சம்

கொரோனா அச்சம்

கொரோனா அச்சம் காரணமாக தமிழக வீரர் அஸ்வின் நேற்று ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். இவரை தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஆன்ட்ரூ டை, ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், இங்கிலாந்து வீரர் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டனர். இதனால் அணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

இந்த அதிர்ச்சியே இன்னும் அணிகளிடம் இருந்து நீங்காத நிலையில் தற்போது ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டேவிட் வார்னர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். அதே போல ஸ்டீவ் ஸ்மித் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு வருகிறது. எனவே சொந்த நாட்டிற்கு திரும்ப நீண்ட நாட்கள் ஆகுமோ என்ற அச்சத்தில் இருவரும் வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

விமானம்

விமானம்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்தனர். இதில் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகிய 3 பேர் வெளியேறிய சூழலில் தற்போது மேலும் இரண்டு பேர் வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. விமானங்களின் தடையே இதற்கு காரணமாக் இருக்கும் நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தனி விமானம் மூலம் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருவதாக கூறப்படுகிறது.

Story first published: Tuesday, April 27, 2021, 11:59 [IST]
Other articles published on Apr 27, 2021
English summary
Top Aussie cricketers Planned to fly back home due to COVID Crisis in india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X