Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2021: அமீரகத்தில் "அரங்கேற்றம்".. போட்டி அட்டவணை முழு விவரம்

மும்பை: ஐபிஎல் தொடர் மீண்டும் நடத்தப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில், போட்டி அட்டவணை குறித்து பார்க்கலாம்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று முதலில் ஏற்பட்டு, பிறகு அடுத்தடுத்து பல வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என கொரோனா பரவியது.

இதனால், மறு தேதி குறிப்பிடாமல் ஐபிஎல்லை பிசிசிஐ ஒத்திவைத்தது. மீண்டும் தொடரை இந்தியாவில் நடத்த வாய்ப்பே இல்லாத சூழலில், அமீரகத்தில் போட்டிகளை நடத்தலாம் என்ற செய்தி கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்தது. இன்று பிசிசிஐ சார்பில் நடந்த "SGM" மீட்டிங்கில் ஐபிஎல் தொடரை அமீரகத்தில் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. செப்டம்பர் - அக்டோபர் வரை மீதமுள்ள 31 போட்டிகளையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏதுவான நேரம்

ஏதுவான நேரம்

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை காலத்தை கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2021 சீசனின் மீதமுள்ள போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடிக்க உள்ளது. பிசிசிஐ சிறப்பு பொதுக் கூட்டத்தில் (எஸ்ஜிஎம்) இந்த முடிவு எடுக்கப்பட்டது. உறுப்பினர்கள் ஐபிஎல் மீண்டும் தொடங்க ஒருமனதாக ஒப்புக்கொண்டனர். மேலும், டி20 உலகக் கோப்பை 2021 நடத்துவதற்கு ஏதுவான நேரம் குறித்து முடிவெடுக்க கூடுதல் கால அவகாசம் ஐசிசியிடம் கேட்கப்பட உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

லிஸ்ட் என்ன

லிஸ்ட் என்ன

இந்நிலையில், மீதமுள்ள 31 போட்டிகளின் அட்டவணையை இங்கே பார்க்கலாம்.

கொல்கத்தா vs பெங்களூரு

ஹைதராபாத் vs மும்பை

ராஜஸ்தான் vs சென்னை

பெங்களூரு vs பஞ்சாப்

ஹைதராபாத் vs சென்னை

கொல்கத்தா vs டெல்லி

ராஜஸ்தான் vs மும்பை

சென்னை vs பஞ்சாப்

பெங்களூரு vs ஹைதராபாத்

மும்பை vs கொல்கத்தா

டெல்லி vs ராஜஸ்தான்

சென்னை vs கொல்கத்தா

மும்பை vs பஞ்சாப்

ஹைதராபாத் vs ராஜஸ்தான்

பெங்களூரு vs டெல்லி

கொல்கத்தா vs பஞ்சாப்

ராஜஸ்தான் vs பெங்களூரு

சென்னை vs மும்பை

டெல்லி vs ஹைதராபாத்

கொல்கத்தா vs ராஜஸ்தான்

ஹைதராபாத் vs பஞ்சாப்

பெங்களூரு vs மும்பை

கொல்கத்தா vs ஹைதராபாத்

டெல்லி vs சென்னை

பஞ்சாப் vs ராஜஸ்தான்

மும்பை vs டெல்லி

பெங்களூரு vs சென்னை

குவாலிஃபயர் -1

எலிமினேட்டர்

குவாலிஃபயர் -2

ஃபைனல்

உறுதியாகாத தகவல்

உறுதியாகாத தகவல்

இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படும் என்றும், 7 போட்டிகள் single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று ஸ்போர்ட்ஸ் டுடே சமீபத்தில் செய்தி வெளியிட்டது. ஆனால், பிசிசிஐ அதுகுறித்த தகவலை இன்று உறுதி செய்யவில்லை.

இரண்டு மாங்காய்

இரண்டு மாங்காய்

அதேசமயம், செப் 15 முதல் அக்டோபர் 15 வரை ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்ற ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் விளையாடுவதால், வீரர்களுக்கு உலகக் கோப்பை டி20 தொடரில் விளையாடுவதற்கு நல்ல ஒரு பயிற்சியாக இருக்கும். ஐபிஎல் தொடரை முடித்துவிடலாம், அதன்மூலம் டி20 உலகக் கோப்பைக்கு வீரர்கள் பயிற்சியும் எடுத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ கருதுவதாக கூறப்படுகிறது.

Story first published: Saturday, May 29, 2021, 18:12 [IST]
Other articles published on May 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+