Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார் நான் "அன்ஃபிட்டா?".. கோலிக்கு ஒரே ஓவரில் நெத்தியடி பதில்.. ஆர்சிபியை கலங்கடித்த தமிழக வீரர்!

சென்னை: பெங்களூருக்கு எதிராக கொல்கத்தா அணியில் ஆடும் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்.

Recommended Video

Kohli-க்கு ஒரே ஓவரில் நெத்தியடி பதில்.. RCB-யை கலங்கடித்த தமிழக வீரர் | Oneindia Tamil

கொல்கத்தாவிற்கும் பெங்களூருக்கு இடையிலான டி 20 போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் பெங்களூர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தாலும் கூட கொல்கத்தாதான் ஆட்டத்தை கட்டுப்படுத்தி வருகிறது.

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து பெங்களூர் அணி அதிர்ச்சி அளித்துள்ளது. பெரிய திட்டத்தோடு வந்த பெங்களூர் அணிக்கு இந்த விக்கெட்டுகள் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்திதான் இந்த இரண்டு விக்கெட்டையும் எடுத்தது. வருண் சக்ரவர்த்தி வீசிய இரண்டாவது பந்திலேயே கோலி விக்கெட்டை எடுத்தார். கோலிக்கு கேரம் பால் போட்டு அவரை விக்கெட் எடுத்தார். இதை பார்த்து கோலியே கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இதையடுத்து அதே ஓவரில் படித்தார் விக்கெட்டையும் வருண் எடுத்தார். பட்டிதார் பொதுவாக ஸ்பின் பவுலிங்கில் நன்றாக ஆடுவார். ஆனால் அவரிடம் மிஸ்டிரி ஸ்பின் பவுலிங்கை வீசி, வருண் விக்கெட் எடுத்தார். ஒரே ஓவரில் ஆர்சிபியின் இரண்டு முக்கிய பேட்ஸ்மேன்களை தமிழகத்தை சேர்ந்த வருண் விக்கெட் எடுத்துள்ளார்.

எதிர்பார்க்கவில்லை

எதிர்பார்க்கவில்லை

வருண் சக்ரவர்த்தி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் தேர்வாகி பின் காயம் காரணமாக வெளியேறினார். அதன்பின் இங்கிலாந்து தொடரில் பிட்டாக இல்லை என்று கூறி நீக்கப்பட்டார். பிட்னஸ் டெஸ்டில் வருண் அப்போது தோல்வி அடைந்துவிட்டார். இதில் வருணை கோலி நேரடியாக விமர்சனமும் செய்திருந்தார்.

விமர்சனம்

விமர்சனம்

அதில், இந்திய அணியில் ஆட வேண்டும் என்றால் ஃபிட்டாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஆட கூடாது என்று வருணை கோலி விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் கோலி வைத்த விமர்சனங்களுக்கு எல்லாம் தற்போது வருண் சக்ரவர்த்தி அதிரடியாக ஒரே ஓவரில் பதிலடி கொடுத்துள்ளார்.

Story first published: Sunday, April 18, 2021, 16:38 [IST]
Other articles published on Apr 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+