திமிராக சக வீரர்களையே திட்டிய இளம் வீரர்.. ஒரே ஓவரில் ஆப் செய்த விஜய் சங்கர்.. இனிமே கத்துவீங்க?
மும்பை: நேற்று மும்பை அணியின் வீரர் குர்னால் பாண்டியாவி ஓவரில் ஹைதராபாத் வீரர் விஜய் சங்கர் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டது வைரலாகி உள்ளது.
மும்பை அணியில் ஆடி வரும் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் க்ருனால் பாண்டியா மீது பல கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் விமர்சனம் வைப்பது உண்டு. களத்தில் திமிராக நடக்கிறார், கோபப்படுகிறார் என்று பலர் விமர்சனம் வைப்பது உண்டு.
முதல் தர போட்டிகளிலும் கூட க்ருனால் பாண்டியா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

பரோடா
பரோடா அணியில் தீபக் ஹூடா நீக்கப்பட்டதற்கு கூட குர்னால் பாண்டியா செய்த அரசியல்தான் காரணம் என்று புகார் வைக்கப்பட்டது. தன் பேச்சை கேட்காத ஹூடாவை அரசியல் செய்து குர்னால் பாண்டியா நீக்கிவிட்டதாக புகார் எழுந்தது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் வீரர்களிடமும் குர்னால் பாண்டியா கோபமாக செயல்படுவதாக புகார் வைக்கப்பட்டது.

புகார்
நேற்றும் கூட க்ருனால் பாண்டியா சக வீரர் போல்ட்டிடம் கோபமாக செயல்பட்டார். க்ருனால் பாண்டியா ஓவர் ஒன்றில் போல்ட் பவுண்டரி விட்டதற்கு க்ருனால் பாண்டியா கோபமாக அவரிடம் கத்தினார். எதோ தான் போடும் பந்துக்கள் எல்லாமே சிறப்பானது, தான் தவறே செய்ய மாட்டேன் என்பது போல க்ருனால் பாண்டியா செயல்பட்டார்.

க்ருனால் பாண்டியா
நேற்று மைதானத்தில் கோபமாக நடந்து கொண்ட க்ருனால் பாண்டியாவிற்கு ஒரே ஓவரில் ஹைதராபாத் அணியில் ஆடும் தமிழக வீரர் விஜய் சங்கர் பதிலடி கொடுத்தார். க்ருனால் பாண்டியா வீசிய 16வது ஓவரில் 2 சிக்ஸர்களை அடுத்தடுத்து பறக்கவிட்டு மொத்தமாக க்ருனால் பாண்டியாவை விஜய் சங்கர் ஆப் செய்தார்.

மும்பை
மும்பை அணி வெல்ல வாய்ப்பு இருந்த சமயத்தில் க்ருனால் பாண்டியா வீசிய இந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் சென்றது. இதனால் க்ருனால் பாண்டியாவிடம் ரோஹித் சர்மா கடுமையாக கோபம் அடைந்தார். அதுவரை மற்றவர்களை திட்டிக்கொண்டு இருந்த க்ருனால் பாண்டியா என்ன செய்வது என்று தெரியாமல் முகத்தை தொங்க போட்டபடி நடந்து சென்றார்.

குர்னால்
இதனால் குர்னால் பாண்டியாவிடம் ரோஹித் சர்மா கடுமையாக கோபம் அடைந்தார். அதுவரை மற்றவர்களை திட்டிக்கொண்டு இருந்த குர்னால் பாண்டியா என்ன செய்வது என்று தெரியாமல் முகத்தை தொங்க போட்டபடி நடந்து சென்றார்.


Click it and Unblock the Notifications