Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் ஆடவே தெரியல.. இவரை ஏன் எடுக்குறீங்க.. தமிழக வீரருக்கு எதிராக கொதிக்கும் ஹைதராபாத் பேன்ஸ்

சென்னை: நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக மோசமாக ஆடிய தமிழக வீரரை ஹைதராபாத் அணி ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

நேற்று கொல்கத்தாவிற்கு எதிராக சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. மோசமான பவுலிங் காரணமாக அதிக ரன்களை வாரி கொடுத்த ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது.

பவுலிங் பிட்ச்சான சேப்பாக்கத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவருக்கு 187/6 ரன்கள் எடுத்தது. அதன்பின் இறங்கிய ஹைதராபாத் 177 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

எப்படி

எப்படி

இந்த போட்டியில் ஹைதராபாத் அணியின் மிடில் ஆர்டர் மோசமாக இருந்தது. முக்கியமாக மிடில் ஆர்டரில் இறங்கிய விஜய் சங்கர் பெரிதாக நிலைத்து நின்று ஆடவில்லை. 7 பந்தில் 11 ரன்கள் எடுத்த விஜய் சங்கர் பெரிதாக ஹைதராபாத் அணிக்கு மிடில் ஆர்டரில் உதவவில்லை. இவர் போட்டியை பினிஷ் செய்யவில்லை.

மணீஷ் பாண்டே

மணீஷ் பாண்டே

மணீஷ் பாண்டே ஒரு பக்கம் அதிரடியாக ஆடும் போது, அவருக்கு உறுதுணையாக இவர் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. கடந்த சீசனிலும் விஜய் சங்கர் பேட்டிங் இப்படித்தான் இருந்தது. பெரிய அளவில் இவர் ஹைதராபாத் அணிக்கு பேட்டிங்கில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. 2 போட்டியில் மட்டுமே சரியாக ஆடினார்.

மோசம்

மோசம்

நேற்றும் இவரின் பேட்டிங் சரியாக இல்லை. இதெல்லாம் போக நேற்று விஜய் சங்கர் ஓவரும் மிக மோசமாக இருந்தது. ஒரே ஓவர் வீசிய விஜய் சங்கர் 14 ரன்களை வாரி கொடுத்தார். சரியான லைனில் வீசவில்லை. மிக மிக மெதுவாக ஸ்பின் பவுலர் வீசும் வேகத்தில்தான் வீசினார். இவர் பந்து வீசிய லென்த்தும் அவ்வளவு சிறப்பாக இல்லை.

ஏன் இப்படி

ஏன் இப்படி

ஹைதராபாத் அணியில் கடந்த இரண்டு வருடமாகவே விஜயசங்கர் பெரிதாக அதிரடி ஆட்டம் எதுவும் ஆடவில்லை. இந்த நிலையில் ஹைதராபாத் அணி ரசிகர்கள் விஜய் சங்கரை பார்த்து கொதித்து போய் உள்ளனர். நேற்று இவரை முன்பே பேட்டிங் இறக்கி இருக்க கூடாது. இவருக்கு முன்பாக சமத்தை பேட்டிங் இறக்கி இருக்க வேண்டும்.

சமத்

சமத்

சமத் களமிறங்கியதும் அதிரடியாக சிக்ஸ், பவுண்டரி என்று அடித்தார். விஜய் சங்கர் அப்படி ஆடவில்லை. விஜய் சங்கரை இனியும் ஆல் ரவுண்டர் என்று சொல்லி அணியில் வைத்திருக்க கூடாது. அவர் ஓவரும் போடுவது இல்லை, பேட்டிங்கும் செய்வது இல்லை... ஆனால் பெயர் மட்டும் ஆல் ரவுண்டர்.. அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்று கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் வைத்துள்ளனர்.

Story first published: Monday, April 12, 2021, 9:08 [IST]
Other articles published on Apr 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+